தமிழ்நாடு

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!

எதிர்க்கட்சி தலைவர் அறிக்கையில் விவசாயிகள் கட்டிய காப்பீட்டு பிரீமியத் தொகை கூட கிடைக்கவில்லை என கூறியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!
Jana Ni
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இரு நிதி நிலை அறிக்கைகள் பொதுமக்களிடமிருந்தும், விவசாய பெருங்குடி மக்களாலும், நடுநிலையாளர்களாலும் பாராட்டை பெற்றிருக்கின்றது என்பதை பொறுத்தக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் இனி வரும் காலங்களில் குறை கூறி அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளர்.

இதுகுறித்து எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல்முறையாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை தனியாக தயாரித்து, கடந்த இரண்டு வருடங்களில் மூன்று முறை சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்து, அதில் இடம்பெற்ற அறிவிப்புகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி, விவசாயிகளின் துயர் துடைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மீது பொறாமையுடனும் அரசியல் காழ்புணர்ச்சியுடனும், எந்தவித தகவல்களையும் தெளிவாக அறிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் உண்மைக்கு மாறான அறிக்கையினை தொடர்ந்து வெளியிடுகிறார்.

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!

வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் முன்னர் ஒவ்வொரு முறையும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி தயாரிக்கப்பட்டது தான் நேற்றைய தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை. தொடர்ந்து இவ்வரசின் மீது அவதூறு சுமத்த வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு தமிழ்நாட்டில் பவனி வரும் எதிர்கட்சித் தலைவர் அவர்கள் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பாக, உண்மைக்கு மாறான அறிக்கை ஒன்றினை 21.03.2023 அன்று வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும், நெல் விவசாயிகளுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும், கரும்புக்கு ஆதார விலையாக ரூபாய் 4,500 எதிர்பார்த்த நிலையில், அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றும் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டம் பற்றியும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது எனவும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகள் அனைவரும் தற்போது இவ்வரசினை கொண்டாடி வருகின்றனர். கரும்பு விவசாயிகளை கண்டுகொள்ளாத முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாக திறமையின்மை காரணமாக 2011ஆம் ஆண்டில் சர்க்கரை ஆலைகளுக்காக சாகுபடி செய்யப்பட்ட 2 இலட்சத்து 92 ஆயிரம் எக்டராக இருந்த கரும்பு பயிரிடும் பரப்பினை, 95 ஆயிரம் எக்டராக குறைத்து மாபெரும் சாதனை புரிந்தவர் தான் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர்.

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!

கரும்பு விவசாயிகளுக்கு பயனளித்து வந்த மாநில அரசு பரிந்துரை விலையை ரத்து செய்ததோடு இல்லாமல், 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மூடுவிழா கண்டவர், இன்று கரும்பு விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார். 2015-2016 அரவைப் பருவம் முதல் 2019-2020 அரவைப் பருவம் வரை கரும்பு விலையை உயர்த்தாமல் டன் ஒன்றுக்கு ரூபாய் 2,750 மட்டுமே வழங்கி வந்தவர்தான் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்கள்.

தற்போது கழக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் கரும்பு விவசாயிகளின் துயரை துடைக்கும் வகையில் 2020-2021 அரவைப் பருவ கரும்பு விலையாக, டன் ஒன்றுக்கு ரூபாய் 2,900 என்றும், 2021-2022 அரவைப் பருவ கரும்பு விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 2,950 என்றும் மேற்கண்ட இரண்டு அரவைப் பருவங்களுக்கும், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூபாய் 365 கோடியே 12 இலட்சம் அரசினால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கிட, வழிவகை கடனாக (Ways and Means) ரூபாய் 434 கோடியே 43 இலட்சம் இவ்வரசினால் வழங்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு கழக ஆட்சியில் 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1,178 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட இணை மின் திட்டப் பணிகளை துவங்காமல் இருந்த காரணத்தால் சுமார் 1,400 கோடி ரூபாய் கூடுதலாக வட்டி செலுத்தும் நிலை ஏற்பட்டது இவருடைய ஆட்சியின் நிர்வாக திறமையின்மைதான்.

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!

இன்றைய எதிர்கட்சித்தலைவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, குடிமராமத்து திட்டம் என்ற திட்டத்தினை ஆரம்பித்து கோடிகளில் நிதி ஒதுக்கி, குடிமராமத்து பணிகள் செய்யாமலேயே ஒதுக்கிய நிதியில் ஒரு பங்கினை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டவர் என்பது தான் உண்மை. அதனால் தான் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தாமலேயே தமிழ்நாட்டின் நிதிநிலையை தள்ளாட வைத்துவிட்டு கடைசியில் ரூபாய் ஐந்து இலட்சம் கோடிக்கு மேல் நிதிப்பற்றாக்குறையை தமிழக மக்களுக்கு பரிசாக அளித்து, தமிழக மக்களை கடனாளிகளாக ஆக்கியவரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர்தான்.

விவசாயிகளின் மீது அக்கரை கொண்ட மாண்புமிகு முதலமைச்சர், அவர்கள் இந்தியப் பிரதமருக்கு விடுத்த வேண்டுகோளின் காரணமாக, முன்கூட்டியே 1.9.2022 அன்றே நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு இதுவரை 3,082 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 28.12 இலட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, 3.6 இலட்சம் விவசாயிகளுக்கு 5,620 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. தார்ப்பாய் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டு, எதிர்பாராது பெய்த மழையையும் சமாளித்து, விவசாயிகள் பாராட்டும் வண்ணம் நெல் கொள்முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேபோல, மழையினால் பாதிக்கப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவினை அதிகப்படுத்த வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசும் அதற்கான ஆணையை வெளியிட்டதை தொடர்ந்து, 20 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற ஆணையும் வெளியிட்டு விவசாயிகளுக்கு உதவி புரிந்ததுள்ளது தற்போதைய அரசுதான். 56,180 தார்ப்பாய்களும் 57,590 தார்ப்பாலின் உறைகளும் தேவைப்படும் அளவிற்கு, அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தில், கோமங்கலம் மற்றும் மாத்தூர் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்லையும் சேர்த்து 25,451 மூட்டைகள் மட்டுமேதான் இன்று இருப்புள்ள நிலையில் 60,000 மூட்டைகள் மழையில் சேதம் என்று எந்த அடிப்படையில் அறிக்கை விடுகிறார் என்று தெரியவில்லை. 25,451 மூட்டைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அவைகள்யாவும், விரைந்து அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, இந்த இரண்டு கொள்முதல் நிலையங்களிலும் கணினிகள் கொண்டு, நாளொன்றுக்கு 3,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை சாதாரண இரகத்திற்கு முந்தைய அதிமுக அரசு, ரூபாய் 50 ஊக்க தொகையும், சன்ன இரகத்திற்கு ரூபாய் 70 ஊக்கத்தொகையும் கொடுத்து வந்த நிலையில், கழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சாதாரண இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூபாய் 75 எனவும் சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூபாய் 100 எனவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வரசு பதவி ஏற்றவுடன், விவசாய பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-22 ஆம் ஆண்டில் நெல் கொள்முதலுக்கு, ரூபாய் 360 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2022-23 ஆம் ஆண்டிலும் ரூபாய் 410 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வரும் நிதியாண்டில் இதற்கென ரூபாய் 500 கோடி தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் விலையானது படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகின்றது.

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்வது ஒன்றிய அரசின் வேளாண் செலவுகள் மற்றும் விலை ஆணையமாக(CACP) இருந்தபோதிலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இவ்வரசு பொறுப்பேற்றவுடன், ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், சாதாரண இரகத்திற்கு சென்ற அரசு அளித்து வந்த ரூபாய் 50 ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூபாய் 75 எனவும், சன்ன இரகத்திற்கு சென்ற அரசு அளித்து வந்த ரூபாய் 70 ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூபாய் 100 எனவும் இவ்வரசால் உயர்த்தி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது, சன்ன இரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு கொள்முதல் விலையாக ரூபாய். 2,160/-ம், சாதாரண இரகத்திற்கு கொள்முதல் விலையாக ரூபாய். 2,115/- ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் உற்பத்திச் செலவையும், நெல்சாகுபடி விவசாயிகளின் கோரிக்கையினையும் கருத்தில்கொண்டு, நெல் கொள்முதல் விலையினை இவ்வரசு படிப்படியாக உயர்த்தி வருகிறது.

பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையைப் பொறுத்த அளவில் கணக்கீடு செய்யப்படுவது, சென்ற ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அதே முறையில்தான் இழப்பீடு கணக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவை யாவும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படியே நடைபெற்று வருகின்றது.

மே 2021 ல் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, 2021-2022 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த ரூபாய் 2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இது கடந்த ஆட்சிக் காலத்தை விட 200 சதவீதம் கூடுதலாகும்.

மேலும், 2020-2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிவர், புரவி புயல், வடகிழக்கு பருவ மழை மற்றும் பருவம் தவறிய மழை போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின்படி மகசூல் இழப்பு கணக்கிட, பயிர் அறுவடை பரிசோதனைகள் முறையாக நடத்தப்பட்டு ரூபாய் 2,609 கோடி காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக சுமார் 13 இலட்சத்து 2 ஆயிரம் விவசாயிகளுக்கு இவ்வரசு பெற்றுத் தந்துள்ளது.

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!

2021-2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டபோது ஒன்றிய அரசின் திட்ட விதிமுறைகளின்படி பயிர் அறுவடை பரிசோதனைகள் முறையாக நடத்தப்பட்டு, மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு ரூபாய் 783 கோடி இழப்பீட்டுத் தொகையாக சுமார் 6.71 இலட்சம் விவசாயிகளுக்கு தி.மு.க அரசு பெற்று தந்துள்ளது. அவ்வருடத்தில் விவசாயிகளின் சார்பாக பிரீமியம் தொகையாக ரூபாய் 177 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, இதுவரை காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூபாய் 3,426 கோடி சுமார் 20 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்று தந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற இவ்வரசு, 2 வருட காலத்திலேயே இத்திட்டத்திற்கென ரூபாய் 4,639 கோடி வழங்கியதோடு மட்டுமல்லாமல், 2023-2024 ஆம் ஆண்டு இத்திட்டத்தினை செயல்படுத்த ரூபாய் 2,337 கோடியும், ஆக மொத்தம் ரூபாய் 6,976 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை கடந்த ஆட்சி காலத்தைவிட 265 சதவீதம் அதிகமாகும்.

எனவே, எதிர்கட்சித் தலைவர் அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கியதாகவும் விவசாயிகள் கட்டிய காப்பீட்டு பிரீமியத் தொகை கூட கிடைக்கவில்லை என கூறியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களிலும், புயல் வெள்ள காலங்களிலும் இயற்கை இடர்பாடுகளின் விதிகளின்படி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்படும் நெற்பயிருக்கு எக்டருக்கு ரூபாய் 13,500/-, மானாவாரி பயிர்களுக்கு எக்டருக்கு ரூபாய் 7,410/-, பல்லாண்டு பயிர்களுக்கு எக்டருக்கு ரூபாய் 18,000/- என உள்ளது. இருந்த போதிலும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 2021 ஆம் ஆண்டில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அறுவடை சமயத்தில் 38,000 எக்டர் பரப்பில் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ரூபாய் 20,000 வீதம் வழங்கியுள்ளது.

அதைப் போல 2023 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையால் 49,737 எக்டர் பரப்பில் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ரூபாய் 20,000 வீதம் வழங்கப்பட்டது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2 முறை இயற்கை பாதிப்பினால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

எப்பொழுதெல்லாம் கதிர் முற்றிய பருவத்தில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ரூபாய் 20,000/- வழங்கப்படுகிறது. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கினங்க மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையிலான குழுக்கள் உடனடியாக பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்தவொரு கிராமத்திலும் நிவாரணம் வழங்கப்படவில்லை என்று எந்த ஒரு புகாரும் பெறப்படவில்லை. எனவே கணக்கெடுப்பு முறையாக செய்யப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் இயற்கை இடர்பாடுகளில் இருந்து அவ்வப்பொழுது இவ்வரசால் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.

“பாராட்டை பொறுத்துக்கொள்ள முடியலையா ? - பழனிசாமி இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : எச்சரித்த அமைச்சர்!

மேலும், 2023-24 ஆம் ஆண்டில் ரூபாய் 38,904 கோடி மதிப்பில் வேளாண் நிதிநிலை அறிக்கை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்கள் முறைப்படி செயல்படுத்தப்பட உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கைகள், தவழ்கிற குழந்தையாகவும், நடக்கிற குழந்தையாக இருந்த போதிலும், வியர்வை சிந்தி, உழைப்பதையே தொழிலாகக் கொண்டு, உலகோர்க்கு உணவளிக்கும் வேளாண் பெருமக்களை மகிழ்வித்தன. இந்த 2023-24 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, வேளாண்மை நிதிநிலை அறிக்கை என்பது, சவலைக் குழந்தை அல்ல, சவால்களுடன், சுறுசுறுப்பாக ஓடுகின்ற திடகாத்திரமான குழந்தைதான் என்பது நிதர்சன உண்மை.

வேளாண் உற்பத்தியில் நிலத்தடி நீரின் பயன்பாடு பெருமளவு உள்ளதால் , தமிழ்நாட்டில் பாசனம் மேற்கொள்ள தேவையான மின்சாரம் கழக ஆட்சி நடைபெற்ற 1990 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தின் விதிகள் படி, இலவச மின்சாரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும் ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

10 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்த இன்றைய எதிர்கட்சித் தலைவர், இலவச மின்சார இணைப்பு வழங்காமல் இருந்து விட்டு, இப்பொழுது மும்முனை மின்சாரம், இருமுனை மின்சாரம் என்று கதை அளக்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு துரிதமாக வழங்கப்பட்டதன் காரணமாக மொத்த சாகுபடி பரப்பு 1 இலட்சத்து 93 ஆயிரம் எக்டர் அதிகரித்து, மொத்தமாக 63 இலட்சத்து 48 ஆயிரம் எக்டராக தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு உயர்ந்திருக்கிறது.

தற்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இரு நிதி நிலை அறிக்கைகள் பொதுமக்களிடமிருந்தும், விவசாய பெருங்குடி மக்களாலும், நடுநிலையாளர்களாலும் பாராட்டை பெற்றிருக்கின்றது என்பதை பொறுத்தக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் இனி வரும் காலங்களில் குறை கூறி அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories