தமிழ்நாடு

சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மையா என்பதை மாணவர்கள் ஆராய வேண்டும் : அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!

சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்பதை ஆராய்ந்து மாணவர்கள் தங்களது பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மையா என்பதை மாணவர்கள் ஆராய வேண்டும் : அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போதைப்பொருட்கள் குறித்து drive against drugs என்ற பெயரில் விழிப்புணர்வு குறும்பட போட்டியைச் சென்னை காவல்துறை நடத்தியது. இந்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைப்பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், சினிமா இயக்குநர் விக்னேஷ் சிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் வெற்றி பெற்ற குறும்படங்கள் மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மையா என்பதை மாணவர்கள் ஆராய வேண்டும் : அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் போதைப் பொருள் பயன்பாடு குறைந்துள்ளது. உண்மையாகச் சிங்கமாகவும் , தமிழ்நாட்டைக் காக்கக்கூடிய சாமிகளாகத் தமிழ்நாடு காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

போதை தடுப்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் . மாணவ செல்வங்கள் சமூக வலைத்தளங்கள் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா என்று ஆராய்ந்து உங்களுடைய பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

இதற்கடுத்து பேசிய சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், " தமிழகத்தில் முற்றிலும் போதைப் பொருட்களைத் தடுக்க வேண்டும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த இரண்டு ஆண்டுகளில் போதை பொருள் தடுப்பு சிறப்பு படை குழு அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories