இந்தியா

”எதற்கும் அஞ்சமாட்டேன்”.. ஒன்றிய அரசு மீது 10 குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி!

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

”எதற்கும் அஞ்சமாட்டேன்”.. ஒன்றிய அரசு மீது 10 குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மக்களைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசியுள்ளார்.

இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என கூறி குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

”எதற்கும் அஞ்சமாட்டேன்”.. ஒன்றிய அரசு மீது 10 குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி!

இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதியும் ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி நேற்று ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ், தி.மு.க, சிபிஎம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

”எதற்கும் அஞ்சமாட்டேன்”.. ஒன்றிய அரசு மீது 10 குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி!

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதானி நிறுவனத்துக்கு சென்ற முதலீடுகள் குறித்து தாம் கேள்வி எழுப்ப கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தம் மீது வழக்கு தொடரப்பட்டு, சிறைத்தண்டனை அளித்து, தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய உரைகள், அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள தொடர்புகள் என்ன?

அதானி குறித்து அடுத்த என்ன பேச்சு வரும் என்று மோடி அஞ்சுகிறார். அவர் கண்ணில் பயத்தை பார்த்தேன். அதானி குறித்த அடுத்த பேச்சு நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்று மோடி எண்ணுகிறார்.

”எதற்கும் அஞ்சமாட்டேன்”.. ஒன்றிய அரசு மீது 10 குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி!

ஒன்றிய பா.ஜ.க., அரசால் தமது குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது. இந்திய விவகாரத்தில் எந்த நாடும் தலையிட வேண்டும் என தாம் பேசவில்லை. பா.ஜ.க., அமைச்சர்கள் தன் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை.

தகுதியிழப்பு, சிறைத்தண்டனை உள்ளிட்ட எதற்கு அஞ்சப் போவதில்லை. இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்காக என்றும் பாடுபடுவேன். ஜனநாயகத்திற்கான மக்களின் குரலாக தமது குரல் ஒலிக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories