அரசியல்

ராகுலுக்கு சிறை? குஷ்புக்கு பதவியா?.. கொதிக்கும் Congress : 2018ம் ஆண்டு குஷ்பு பதிவிட்ட ட்வீட் என்ன?

2018ம் ஆண்டு நரேந்திர மோடி குறித்து விமர்சித்து பதிவிட்ட குஷ்புவின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ராகுலுக்கு சிறை? குஷ்புக்கு பதவியா?.. கொதிக்கும் Congress : 2018ம் ஆண்டு குஷ்பு பதிவிட்ட ட்வீட் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மக்களைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசியுள்ளார்.

ராகுலுக்கு சிறை? குஷ்புக்கு பதவியா?.. கொதிக்கும் Congress : 2018ம் ஆண்டு குஷ்பு பதிவிட்ட ட்வீட் என்ன?

இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என கூறி குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதியும் ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி நேற்று ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ், தி.மு.க, சிபிஎம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ராகுலுக்கு சிறை? குஷ்புக்கு பதவியா?.. கொதிக்கும் Congress : 2018ம் ஆண்டு குஷ்பு பதிவிட்ட ட்வீட் என்ன?

மேலும், "இந்தியாவின் குரலுக்காகப் போராடுகிறேன். என்ன விலை வேண்டுமானாலும் நான் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பா.ஜ.கவில் இருக்கும் நடிகை குஷ்பு 2018ம் ஆண்டு மோடியை விமர்சித்துப் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் , மோடியை விமர்சித்த ராகுல் காந்தி 2 ஆண்டு சிறைத் தண்டனை, குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியா? என பலரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

2018ம் ஆண்டு குஷ்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மோடி இங்கே.. மோடி அங்கே.. எங்கும் மோடி.. என்ன இது? ஒவ்வொரு மோடியின் பின்னாலும் ஊழல் பெயர் இருக்கிறது. மோடி என்றால் ஊழல். மோடியின் பெயரை ஊழல் என்று மாற்றுவோம்" என குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி 2020ம் ஆண்டு பா.ஜ.கவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குஷ்புவின் இந்த ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பா.ஜ.கவுக்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங், "மோடியை ஊழல் என்று விமர்சித்த குஷ்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது எப்போது அவதூறு வழக்க போடுவீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories