தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் அ.தி.மு.க செங்கோட்டை நகர்மன்ற தலைவர்!

அ.தி.மு.க.வைச் சேர்ந்த செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ஆர்.ராமலட்சுமி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் அ.தி.மு.க செங்கோட்டை நகர்மன்ற தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தென்காசி தெற்கு மாவட்டம், செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ஆர்.ராமலட்சுமி அ.தி.மு.க.லிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.

அப்போது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ.பத்மநாதன், இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் அ.தி.மு.க செங்கோட்டை நகர்மன்ற தலைவர்!

துறைமுகம் காஜா, மற்றும் செங்கோட்டை நகரச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பூ.ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் காசிதர்மம்துரை, நகர்மன்ற உறுப்பினர் பேபி ரஜப்பாத்திமா ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மையில் கூட கோவையில் நடந்த விழாவில் அ.தி.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories