தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிக்கொண்ட விறகு லாரி-ஆம்னி கார்.. அதிகாலையில் நிகழ்ந்த கோரத்தில் 6 பேருக்கு நேர்ந்த சோகம்

விறகு லாரியும், ஆம்னி காரும் திருச்சி அருகே மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட விறகு லாரி-ஆம்னி கார்.. அதிகாலையில் நிகழ்ந்த கோரத்தில் 6 பேருக்கு நேர்ந்த சோகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே இருக்கும் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் விறகு ஏற்றி வந்த லாரியும் ஆம்னி காரும் நேருக்குக்கு நேர் மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் கும்பகோணத்துக்கு சென்று கொண்டிருந்த சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட விறகு லாரி-ஆம்னி கார்.. அதிகாலையில் நிகழ்ந்த கோரத்தில் 6 பேருக்கு நேர்ந்த சோகம்

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இருந்து 9 பேர் கொண்ட குடும்பத்தார் இன்று அதிகாலை சமயத்தில் கும்பகோணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். கும்பகோணத்தில் இருக்கும் கோயிலுக்கு தரிசனம் செய்ய சிறுமி உட்பட அனைவரும் ஆம்னி காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட விறகு லாரி-ஆம்னி கார்.. அதிகாலையில் நிகழ்ந்த கோரத்தில் 6 பேருக்கு நேர்ந்த சோகம்

அதேபோல திருச்சியில் இருந்து விறகு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லாரியும் - காரும் திருவாசி என்ற இடத்திற்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் சிக்கிய கார் முழுவதுமாக நசுங்கி சேதமடைந்தது.

அதிகாலை சுமார் 3.40 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் ஆம்னி காரில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானர். இந்த விபத்தில் சிக்கி ஒரு சிறுமி, ஒரு பெண், 4 ஆண்கள் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய படுகாயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட விறகு லாரி-ஆம்னி கார்.. அதிகாலையில் நிகழ்ந்த கோரத்தில் 6 பேருக்கு நேர்ந்த சோகம்

மேலும் உயிரிழந்த 6 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆம்னி காரில் வந்தவர்கள் அனைவரும் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இந்த விபத்துக்குள்ளான காரணம் குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த கோர விபத்தில் சிக்கி சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories