தமிழ்நாடு

“3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத அனுமதியா?” : உண்மை என்ன? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் !

ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும். பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

“3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத அனுமதியா?” : உண்மை என்ன? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த 2022 - 2023-ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அதில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனவும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

“3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத அனுமதியா?” : உண்மை என்ன? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் !

அந்த வகையில் 12-ம் வகுப்பு , 11-ம் வகுப்புக்கு தற்போது பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். 12-ம், 11-ம் வகுப்புகளுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியானது. அதன்படி 50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து பொதுத்தேர்வு எழுத்தாத மாணவர்களை கண்டுபிடித்து, அவர்களை தேர்வு எழுத வைக்கும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் "பள்ளி மாணவர்கள் ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும். பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்" என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதாக தவறான செய்தி பரவியது.

“3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத அனுமதியா?” : உண்மை என்ன? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் !

இந்த நிலையில் இந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆண்டுக்கு மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு வருகை தந்திருந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தி தவறானது. பள்ளிகள் செயல்படாத கொரோனா காலத்தில் அன்றைக்கு இருந்த அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது ஆண்டுக்கு 75% வருகை பதிவு உள்ள மாணவர்களே பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள் என்ற விதியே நடைமுறையில் உள்ளது.

“3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத அனுமதியா?” : உண்மை என்ன? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் !

3 நாட்கள் வந்தால் போதும் பொதுத் தேர்வு எழுதலாம் எனும் செய்தி தவறானது! தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் All pass பெற்ற மாணவர்கள்தான் தற்போது 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகிறார்கள்.

அவர்களுக்குத் தேர்வு பயம் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருக்கும், எனவே அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகவே, அனைவரும் தேர்வு எழுத வாருங்கள், அனைவருக்கும் ஹால் டிக்கெட் தருகிறோம் எனக் கூறினோம். வருங்காலங்களில் 75 சதவீதம் வருகை பதிவு இருந்தால்தான் பொதுத் தேர்வு எழுத முடியும்!

தேர்வு எழுத மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஓரிரு தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அடுத்தடுத்து தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரவிவரும் காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் 5 பேர் கொண்ட குழுவினர் முதல்வரிடம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடரும்" என்றார்.

banner

Related Stories

Related Stories