தமிழ்நாடு

100 ஆண்டுகால நடைபாதையை மூடிய இராணுவ கண்டோன்மென்ட் : ஒன்றிய அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்த TR.பாலு MP!

தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு, எம்.பி, ஒன்றிய இராணுவ அமைச்சரை சந்தித்து மக்கள் குறைகளை எடுத்துச் சொன்னதன் அடிப்படையில் விரைவில் தீர்வு காண்பதாகக் கூறியுள்ளார்.

100 ஆண்டுகால நடைபாதையை மூடிய இராணுவ கண்டோன்மென்ட் : ஒன்றிய அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்த TR.பாலு MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியைச் சார்ந்த ருத்ரா சாலை (மத்தியாஸ் நகர்), பசார் சாலை, ஈரோப்பியன் லைன், மேட்டுத் தெரு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த நடைபாதையை இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கண்டோன்மென்ட் வாரியம் மூடிவிட்டபடியால் அங்கு வாழும் மக்கள் நடமாடுவதற்கு வசதி இல்லாததாலும், மிக நீளமான சுற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருப்பதாலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் நல்வாழ்வுச் சங்கங்களும், அரசியல் தலைவர்களும், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்களும், தொடர்ந்து கண்டோன்மென்ட் வாரியத்திற்கு பல கடிதங்களை எழுதியிருந்தனர். ஆனால், இதுவரை எந்தப் பலனும் கிட்டவில்லை.

100 ஆண்டுகால நடைபாதையை மூடிய இராணுவ கண்டோன்மென்ட் : ஒன்றிய அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்த TR.பாலு MP!

இந்நிலையில், இன்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு, எம்.பி, ஒன்றிய இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்களைச் சந்தித்து மக்கள் குறைகளை எடுத்துச் சொன்னதன் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாகக் கூறியுள்ளார்.

இதேபோல், 110 ஆண்டுகளாக ஏழு தலைமுறைகளாக துளசிங்கபுரம் பேட்டரி லைன் பகுதியில் குடியிருக்கும் 15 குடும்பங்களுக்கு அடிமனைகள் வழங்குவதாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் உறுதி அளித்த ராணுவம் இதுவரை அந்த நிலத்தை வழங்காதது மட்டுமின்றி, 1911ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பட்டா மற்றும் தொடர்ந்து கட்டி வரும் வரிகள் போன்றவற்றின் சான்றுகளையும் கண்டோன்மென்ட் அதிகாரிகள் நன்கு அறிந்தும் எந்தவிதக் கவனமும் செலுத்தாமல் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி கொண்டிருப்பதையும் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டி.ஆர்.பாலு, எம்.பி. எடுத்துக் கூறி இந்தப் பிரச்சினைக்கு சரியான முடிவு வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

100 ஆண்டுகால நடைபாதையை மூடிய இராணுவ கண்டோன்மென்ட் : ஒன்றிய அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்த TR.பாலு MP!

இந்தப் பிரச்சினையில் அமைச்சர், கருணை உள்ளத்தோடு அணுகுவதோடு, மக்கள் வாழும் பகுதிகளை அடைய உரிய அணுகுப் பாதைகளையும் மக்கள் வசதியாக வாழ்வதற்குரிய நிலப் பகுதியையும் இராணுவம் ஒதுக்கீடு செய்து தருமாறு, திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, எம்.பி, கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்களும், சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அவர்களும், ஒன்றிய அமைச்சர்களையும் சந்தித்து தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த முறை ஒன்றிய அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் நிச்சயம் உரிய முறையில் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

banner

Related Stories

Related Stories