தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பி போராட்டம்: த.பெ.தி.க அமைப்பினர் ஆவேசம்

சென்னையில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பலலை ஆளுநர் மாளிகைக்கு பார்சல் அனுப்பி வைத்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பி போராட்டம்: த.பெ.தி.க அமைப்பினர் ஆவேசம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் மூலம் நாடுமுழுவதும் பலர் தற்கொலை செய்துகொண்ட அவல நிலை நீடித்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்போதிருந்த் அதிமுக அரசு அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது.

பின்னர் உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது. இதனையடுத்து சரியான சட்ட விதிகளுடன் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பி போராட்டம்: த.பெ.தி.க அமைப்பினர் ஆவேசம்

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி வந்ததும், ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்து, அவரது கருத்துரை - பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் (ordinance) இயற்றப்பட்டது.

இதைடுத்து, கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்கான மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பி போராட்டம்: த.பெ.தி.க அமைப்பினர் ஆவேசம்

பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா தொடர்பாக, பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, ஒரே நாளில் தமிழக அரசும் விளக்கங்களை அளித்தது. பின்னர் சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு 5 மாதங்கள் ஆனநிலையில், அதன் மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பியனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. அதேவேளையில் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நிறைவேற்ற்ப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பி போராட்டம்: த.பெ.தி.க அமைப்பினர் ஆவேசம்

அதனொருபகுதியாக, சென்னையில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பலலை ஆளுநர் மாளிகைக்கு பார்சல் அனுப்பி வைத்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர் ஜெகதீசன் தலைமையில். ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்ட தமிழர்களின் சாம்பலை தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பி போராட்டம்: த.பெ.தி.க அமைப்பினர் ஆவேசம்

போராட்டத்தில் கலந்துகொண்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பல் அடங்கிய பார்சலை, தபால் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெகதீசன், ”ஆளுநர் பதவி யாருக்கும் பலன் இல்லை, தமிழ்நாடு ஆளுநர் என்று சொன்னால் அந்த ஆளுநரால் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் பலன் இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆளுநர் பதவியை ஏன் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு ஒரு கண்காணிப்பு தேவை. ஒரு மாநிலத்தில் நடக்கின்ற செய்திகளை எடுத்து சொல்வதற்காக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளராக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories