தமிழ்நாடு

ரூ.100 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ.4 கோடியை சுருட்டிய கும்பல்: சொகுசு விடுதியில் வைத்து கைது!

ரூ.100 கோடி லோன் தொகை பெற்று தருவதாக கூறி ரூ. 4 கோடி பணத்தை கையாடல் செய்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர்.

ரூ.100 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ.4 கோடியை சுருட்டிய கும்பல்: சொகுசு விடுதியில் வைத்து கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷியாமல் சட்டர்ஜி. இவர் நாக்பூரில் Galaxy Solar Energy Pvt. Ltd என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தை ஷியாமல் சட்டர்ஜி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது.

இதையடுத்து தரகர்கள் மூலம் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இயங்கி வந்த East Coast Properties நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் அவர்கள் ரூ.100 கோடியை தங்கள் நிறுவனத்தின் மூலம் லோன் தொகையாகக் கொடுப்பதாக ஷியாமல் சட்டர்ஜியிடம் கூறியுள்ளனர். மேலும் இதற்கு ஆறு மாத வட்டியாக ரூ.4 கோடியை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ரூ.100 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ.4 கோடியை சுருட்டிய கும்பல்: சொகுசு விடுதியில் வைத்து கைது!

இதனை நம்பிய ஷியாமல் சட்டர்ஜி East Coast Properties நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு ரூ.3.50 கோடி பணத்தை RTGS மூலமும், ரூ.50 லட்சத்தை ரொக்கமாகவும் என அவர்கள் கேட்டபடி ரூ.4 கோடியை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் சொன்னபடி ரூ.100 கோடியைக் கொடுக்கவில்லை. பிறகு அவர்களை தொடர்புகொண்டபோது நிறுவனத்தை மூடிவிட்டுத் தலைமறைவாகியது தெரியவந்தது. பின்னர் இது குறித்து ஷியாமல் சட்டர்ஜி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

ரூ.100 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ.4 கோடியை சுருட்டிய கும்பல்: சொகுசு விடுதியில் வைத்து கைது!

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கண்டுபிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு போலிஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆவணம் மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுமதி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் குற்றவாளிகளான பன்னீர்செல்வம், சத்தீஷ்குமார், பவன்குமார் ஆகிய மூன்று பேரை சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள சொகுசு விடுதியில் வைத்து கைது செய்தனர். அதன் பின் ஆலந்தூர், குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி மூன்று பேரையும் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories