தமிழ்நாடு

“மு.க.ஸ்டாலினும், புத்ததேவும் அரசியலை தாண்டி மக்களுக்காக சிந்திப்பவர்கள்”: கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் !

அரசியல் பீரங்கிகளின் ஈயத்தில் இல்லாத எடையும், அரசியல் ஏணிகளில் இல்லாத உயரமும் அவர்களிடம் உள்ளது என மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

“மு.க.ஸ்டாலினும், புத்ததேவும் அரசியலை தாண்டி மக்களுக்காக சிந்திப்பவர்கள்”: கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கட்சி அரசியலை தாண்டி மக்களுக்காக சிந்திக்க கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில தேசிய நாளேடான தி டெலிகிராபில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணகாந்தி எழுதிய செய்திக்கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. மார்ச் ஒன்றாம் தேதி பிறந்தநாள் காணும் மக்களின் முதலமைச்சர்கள் இருவர் என்ற தலைப்பில் அவர் இந்த செய்திக்கட்டுரையை எழுதியுள்ளார்.

“மு.க.ஸ்டாலினும், புத்ததேவும் அரசியலை தாண்டி மக்களுக்காக சிந்திப்பவர்கள்”: கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்யா இருவருமே மார்ச் முதல் தேதியன்று பிறந்தநாள் கொண்டாடும் மக்கள் தலைவர்கள் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இரு தலைவர்களுமே அரசியலை தாண்டி மக்களின் நலன் குறித்து சிந்திக்கும் தலைவர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இது 70வது பிறந்தநாள். நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை வழங்குவார்கள், அரசியல் வட்டாரத்தில் இல்லாதவர்களும் அவர்களைப் பாராட்டுவார்கள் என்று கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டுள்ளார்.

“மு.க.ஸ்டாலினும், புத்ததேவும் அரசியலை தாண்டி மக்களுக்காக சிந்திப்பவர்கள்”: கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் !

புத்ததேப் மார்க்சிய சித்தாந்தத்தை பின்பற்றுவர் என்றால் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல். அரசியலை தாண்டி அவர் மீது தீவிர பற்றுக்கொண்ட தொண்டர்கள் ஏராளம். இரு தலைவர்களுமே முதலமைச்சர்களாக மட்டுமின்றி எதிர்க்கட்சிவரிசையில் அமர்ந்து கேள்விஎழுப்பிய அனுபவம் பெற்றவர்கள்.

தாய்மொழி மீது பற்றுக்கொண்டவர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதில் திறமை மிக்கவர்கள் என்றும் நாகரீகமான அணுகுமுறை கொண்டவர்கள் என்றும் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

“மு.க.ஸ்டாலினும், புத்ததேவும் அரசியலை தாண்டி மக்களுக்காக சிந்திப்பவர்கள்”: கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் !

மு.க.ஸ்டாலினின் பண்பாடு மற்றும் அரசியல் பாரம்பரியம் என்பது திருவள்ளுவரையும் பெரியாரையும் பின்தொடர்ந்து வரக்கூடியது. பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் தான்அவரது சிந்தனைக்கூடம். சோவியத் யூனியன் அதிபர் ஸ்டாலின் மறைவுச்செய்தி கிடைத்த நாளில் பிறந்தவர் என்பதால் ஸ்டாலின் என்ற பெயர் சூட்டப்பட்டவர்.

அண்மையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த கோபண்ணாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பண்பாட்டாளர் மு.க.ஸ்டாலின் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவிழாவில் அவர் ஆற்றிய உரை எந்த ஒரு வடஇந்திய தேசியவாதியையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடியதாக இருந்தது.

“மு.க.ஸ்டாலினும், புத்ததேவும் அரசியலை தாண்டி மக்களுக்காக சிந்திப்பவர்கள்”: கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் !

வடக்கையும், தெற்கையும், மத்தியையும், மாநிலத்தையும் தடையின்றி தமது உரையில் அவர் ஒன்றிணைத்தார் என்றும் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். ஸ்டாலினும் புத்ததேபும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களை பற்றி சந்திப்பவர்கள். அரசியல் பீரங்கிகளின் ஈயத்தில் இல்லாத எடையும், அரசியல் ஏணிகளில் இல்லாத உயரமும் அவர்களிடம் உள்ளது.

அதனால்தான், அவர்கள் பிறந்த நாளான மார்ச் 1 முக்கியத்துவம் வாய்ந்ததாக தமக்குத் தெரிகிறது. முன்னேற்றத்தை நோக்கிய அந்த அணிவகுப்பாளர்கள் இருவரையும் பாராட்டுகிறேன் என்றும் கோபாலகிருஷ்ண காந்தி, தி டெலிகிராப் நாளேட்டில் எழுதியுள்ளார்.

banner

Related Stories

Related Stories