தமிழ்நாடு

அமெரிக்காவுக்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6 கோடி மோசடி: போலிஸாரிடம் சென்னை தம்பதி சிக்கியது எப்படி?

போலியான கொரோனா மருந்துகளை வெளிநாட்டிற்கு அனுப்பி சுமார் 6.30 கோடி மோசடி செய்த தம்பதியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6 கோடி மோசடி: போலிஸாரிடம் சென்னை தம்பதி சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவை சேர்ந்த Turcios Medical நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு மருத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டு சென்னை கீழ் கட்டளையில் உள்ள முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தை ஆன்லைன் மூலமாக அணுகியுள்ளனர்.

இதையடுத்து Turcios Medical நிறுவனத்தின் நிர்வாகிகளை டில்லியில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று, கொரோனா மருந்து தயாரிக்கும் விதத்தை காண்பித்துள்ளார்.

அப்போது முதற்கட்டமாக 10 மருந்துகளை முருகப்பா நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிஹர சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். இந்த மருந்தைப் பயன்படுத்திய கொரோனா நோயாளிகளுக்கு நோய் குணமாகியுள்ளது.

அமெரிக்காவுக்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6 கோடி மோசடி: போலிஸாரிடம் சென்னை தம்பதி சிக்கியது எப்படி?

இதையடுத்து Turcios Medical நிறுவனம் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்துடன் 2000 வயல்கள் கொரோனா மருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.இதற்காக அந்த நிறுவனம் ரூ.6,29,63,325 பணத்தை வங்கியில் செலுத்தியுள்ளது.

பிறகு கொரோனா மருந்துகளை முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனம் அவர்களுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இந்த மருந்தைச் சாப்பிட்ட நோயாளிகளுக்கு பலன் கொடுக்கவில்லை.

இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்தியாவில் இருந்து நாங்கள் கொரோனா மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்ய வில்லை என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6 கோடி மோசடி: போலிஸாரிடம் சென்னை தம்பதி சிக்கியது எப்படி?

பின்னர் Turcios Medical உரிமையாளர் க்யூகோ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்ற பிரிவில் உள்ள ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கீழக்கட்டளையில் செயல்பட்டு வரும் முருகப்பா ஹோல்சேல் விற்பனை நிறுவனத்தை ஆய்வு செய்தனர். அப்போது போலிஸார் வருவதை அறிந்த நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகளான ஹரிஹர சுப்பிரமணியன், காஞ்சனா இருவரும் தலைமறைவாகியுள்ளனர்

இதனைத் தொடர்ந்து இவருவாரது செல்போன் எண்களை வைத்து சைபர் போலிஸார் உதவியுடன் தேடி வந்துள்ளனர். தொடர்ந்து போலிஸாரிடம் இருவரும் சிக்காமல் இருந்து வந்தனர்.

பின்னர் இவர்கள் பிளிப்கார்ட், அமேசான் ஆகிய டெலிவரி நிறுவனங்களில் செல்போன்களை பயன்படுத்தி ஆர்டர் செய்துள்ளார்களா என போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் செல்போன் ஆர்டர் செய்தது தெரியவந்தது. போரூரில் ஹரிஹர சுப்ரமணியனும் சோளிங்கநல்லூரில் காஞ்சனாவும் இருப்பதை போலிஸார் கண்டுபிடித்தனர்

அமெரிக்காவுக்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6 கோடி மோசடி: போலிஸாரிடம் சென்னை தம்பதி சிக்கியது எப்படி?

பின்னர் அங்கு சென்ற போலிஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2019 ஆம் ஆண்டிலிருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதும், கொரோனா காலத்தில் மருந்துகள் அதிக அளவு தேவைப்பட்டதால் அதைப் பயன்படுத்திக் கொண்டு போலியாக மருந்துகளை விநியோகம் செய்தது தெரியவந்தது.

மேலும் ஹரிஹர சுப்பிரமணியனின் இரண்டாவது மனைவி காஞ்சனா என்பதையும் போலிஸார் கண்டுபிடித்தனர். இருவரும் கூட்டு சேர்ந்து டெல்லி போலி மருந்து விற்பனை கும்பலுடன் இணைந்து போலியான கொரோனா மருந்தை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இவர்களுக்குப் பின்னால் மேலும் யார்யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories