தமிழ்நாடு

“எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும்..”: முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்! (video)

எங்களுக்கு குண்டு வைக்க தெரியும், பாம் போட தெரியும், எல்லாம் செய்ய வைத்து விடாதீர்கள் நாடு தாங்காது என பா.ஜ.க நிர்வாகி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும்..”: முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்! (video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிம்சனில் கண்டன உண்ணாவிரத போராட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், பா.ஜ.க நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

“எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும்..”: முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்! (video)

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ராணுவ வீரரும் பா.ஜ.க நிர்வாகியுமான கர்ணல் பாண்டியன், இராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள் எனவும் பாம் வைக்க தெரிந்தவர்கள் எனவும், இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் பாம் வைப்போம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் கெட்டுவிடும் எனவும் இதை பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பத்திரிக்கையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இப்படி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது முறையானதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு செய்தியாளர்களை சூழந்துக்கொண்டு பா.ஜ.கவினர் கடுமையாக விமர்சித்தார்.

இதனால் பத்திரிகையாளர்களுக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ வீரரும் பா.ஜ.க நிர்வாகியுமான கர்ணல் பாண்டியனை கைது செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories