தமிழ்நாடு

"பா.ஜ.கவின் பொம்மலாட்டத்திற்கு ஆடிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க": கி.வீரமணி கடும் சாடல்!

பா.ஜ.கவின் பொம்மலாட்டத்திற்கு ஆடிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க என கி.வீரமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

"பா.ஜ.கவின் பொம்மலாட்டத்திற்கு ஆடிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க": கி.வீரமணி கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மயிலாப்பூரில் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் பரப்புரை பயண விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வழக்கறிஞர் அருள்மொழி, வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி எம்.எல்.ஏ உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, "இந்தியாவிற்கே சமூகநீதியைச் சொல்லிக் கொடுத்து வழிகாட்டக் கூடிய பெரியார் மண்ணாகத் தமிழ்நாடு இருக்கிறது.

"பா.ஜ.கவின் பொம்மலாட்டத்திற்கு ஆடிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க": கி.வீரமணி கடும் சாடல்!

தந்தை பெரியாருக்கு அம்பேத்கர் அவர்களுக்கும் நல்ல நட்பு இருந்தது. இன்றைக்கு அம்பேத்கரை யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். அம்பேத்கரின் கொள்கைகளை மோடி நிறைவேற்றுகிறார் என புத்தகம் எழுதியுள்ளனர். இதைக் கேட்கவே கேட்கவே சிரிப்பாக இருக்கிறது.

இவர்களெல்லாம் படிக்கக்கூடாது என்று ஒரு காலத்தில் மதத்தின் பெயரால் சொல்லப்பட்டது. ஆனால் அனைவரையும் படியுங்கள் படியுங்கள் என சொன்னது திராவிட இயக்கம்தான். இன்றைக்கும் அது தொடர்கிறது. அதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்புக்காக எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் இன்றளவும் ஜாதி அமைப்பை நியாயப்படுத்தும் அமைப்பாகவே ஆர்.எஸ்.எஸ் உள்ளது.

இன்றைக்கு ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு சுதந்திரமான அரசு அல்ல. ஆர்.எஸ்.எஸ் உத்தரவுகளைச் செயல்படுத்தும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. அதேபோல் பா.ஜ.க வின் சொல்லுக்கு அ.தி.மு.க தலையாட்டி பொம்மையாக இருந்து வருகிறது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க அசிங்கப்பட்டு வருவதைப் பார்க்கும் போது புரிந்திருக்கும். இப்படிப் பல வழிகளில் தமிழ்நாட்டில் சமூகநீதியைச் சூறையாட நினைக்கிறார்கள்.

"பா.ஜ.கவின் பொம்மலாட்டத்திற்கு ஆடிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க": கி.வீரமணி கடும் சாடல்!

அந்த முயற்சியை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத் தகுதியுள்ள வலுவான ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், அவர் தான் நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டில் முக்கிய மாற்றம் நிகழ்ந்திருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை. சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories