முரசொலி தலையங்கம்

8 ஆண்டாக சொல்லி வருகிறீர்களே அந்த எய்ம்ஸ் எங்கே? : மோடி அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!

மருத்துவக் கல்லூரிதான் செயல்படுகிறதே என்று ஒரு ஒன்றிய அமைச்சர் சொல்வாரே ஆனால், இவருக்கு தான் வகிக்கும் துறை பற்றிய அரிச்சுவடியே தெரியவில்லை என்று பொருள்.

8 ஆண்டாக சொல்லி வருகிறீர்களே அந்த எய்ம்ஸ் எங்கே? : மோடி அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (14-02-2023)

அந்தக் கேள்விக்கு இதுவா பதில்?

'எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிதான் செயல்படுகிறதே என்று ஒரு ஒன்றிய அமைச்சர் சொல்வாரே ஆனால், இவருக்கு தான் வகிக்கும் துறை பற்றிய அரிச்சுவடியே தெரியவில்லை என்று பொருள்.

மருத்துவமனையை எப்போது கட்டுவீர்கள்?' - இதுதான் திரா விட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்வி! “கட்டடம் இல்லை என்றால் என்ன? மருத்துவக் கல்லூரி செயல்படு கிறதே?' – என்பது ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் பதில்!

இந்தக் கேள்விக்கு இதுவா பதில்? இல்லை. 'எய்ம்ஸ் மருத்துவ மனையை 2050 ஆம் ஆண்டு கட்டி முடிப்போம்' என்று சொன்னால்கூட அது, அதற்குரிய பதிலாக இருக்க முடியும். 27 ஆண்டுகள் கழித்தாவது கட்டி முடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால், கல்லூரி செயல்படுகிறது என்றால் என்ன அர்த்தம்?

எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மருத்துவமனையையும், மருத்துவக் கல்லூரியையும் உள்ளடக்கியது ஆகும். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இந்த மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன. மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் இணைந்து செயல்பட வைப்பது ஆகும். 300 ஏக்கரில் 2000 கோடி மதிப்பில் அமைய வேண்டிய மாபெரும் நிறுவனம் ஆகும். இது எதையும் உருவாக்காமல் மதுரையில் ஒரு பெயர் பலகையும் மதில் சுவரும் மட்டுமே கட்டிவிட்டு, கட்ட டம் தேவையில்லை, மருத்துவக் கல்லூரிதான் செயல்படுகிறதே என்று ஒரு ஒன்றிய அமைச்சர் சொல்வாரே ஆனால், இவருக்கு தான் வகிக்கும் துறை பற்றிய அரிச்சுவடியே தெரியவில்லை என்று பொருள

8 ஆண்டாக சொல்லி வருகிறீர்களே அந்த எய்ம்ஸ் எங்கே? : மோடி அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!

2022ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டதே. எய்ம்ஸ் மருத்துவமனை, அது எங்கே?" என்று நாம் கேட்கவில்லை. 2014 ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறீர்களே அது எங்கே?" என்றுதான் நாம் கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று முதன்முதலாக 19.6.2014 அன்று தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. இரண்டு இடங்களைத் தேர்வு செய்து 31.10.2014 அன்று தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது.

28.2.2015 அன்று ஒன்றிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று சொன்னார். ஒன்றிய அரசின் குழுவானது 22.4.2015 முதல் மூன்று நாட்கள் தமிழ்நாட்டுக்கு வந்து இடங்களை பார்வையிட்டது. 4.5.2017 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய நான்கு மாத காலக்கெடுவை ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் விதித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்று தேதியே குறித்தார்கள். அடிக்கல் நாட்டப்படவில்லை.

மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகளாகியும் 5 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு ஆயிரத்து 977 கோடி ரூபாயாக அதிகரித்த நிலையில். ஓராண்டு கழித்து ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெறும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

82 சதவீதம் நிதியான ஆயிரத்து 627 கோடி ரூபாய் ஜப்பானின் ஜைய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்படும். எஞ்சிய 18 சதவிகிதம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும் என கூறப்பட்டது.

8 ஆண்டாக சொல்லி வருகிறீர்களே அந்த எய்ம்ஸ் எங்கே? : மோடி அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!

இந்த சூழலிலும், 3 ஆண்டுகளாக எந்த பணிகளும் தொடங்கவில்லை. உரிய நேரத்தில் கட்டுமான பணி தொடங்காமல் தாமதம் செய்ததால் 713 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டப்படவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு. மாணவர் சேர்க்கை நடைபெற்று இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூ ரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. 'அதுதான் தி.மு.க. அரசே இராமநாத புரத்தில் கல்லூரியைத் தொடங்கிவிட்டதே. இனி கட்டடமே தேவையில்லை என்று தட்டிக் கழிக்கப்பார்க்கிறது பா.ஜ.க. அரசு. ஒன்றிய அமைச்சரின் கூற்று இதனைத்தான் வெளிப்படுத்துகிறது.

ஒன்றிய அரசின் எய்ம்ஸ் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். “எய்ம்ஸ் மருத் துவமனை 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக 45 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். 2019இல் பணிகளை ஒன்றிய அமைச்சர் துவக்கிவைத்து விட்டு சென்றார்கள். 222.47ஏக்கர் நீலம் அன்றைக்கே தரப்பட்டு விட்டது. அதனைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளார் கள். இங்கு நீலம் பிரச்சினை இல்லை. நீதிப் பிரச்சினைதான் உள்ளது.

தி.மு.க. அரசு அமைந்த பிறகு உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிட வேண்டுமென முதல்வர் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார் கள். 50 மாணவர்கள் சேர்க்கைக்கு மதுரை தனியார் மருத்துவக் கல்லூரி, புதுவை ஜிப்மர் அல்லது கலைக்கல்லூரியில் சேர்க்கச் சொன்னார்கள். ஜிப்மர் வேறு மாநிலம், கலைக் கல்லூரியிலோ, தனியார் மருத்துவக்கல்லூரியிலோ சேர்த்தால் சரியாக இருக்காது. இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் முதலாமாண்டு 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். ஒரு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை வருவது என்பது எத்தனை மாணவர்கள் படிக் கிறார்கள் எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை பொறுத்தது.

8 ஆண்டாக சொல்லி வருகிறீர்களே அந்த எய்ம்ஸ் எங்கே? : மோடி அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்க வலியுறுத்தி வருகிறோம். அசாம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் மதுரையில் ஆரம்பிக்கும் போதே சொன்னார்கள். ஆனால், தமிழ்நாடு எய்ம்ஸ் தவிர மற்றவற்றிற்கு நீதி ஒதுக்கு கிறார்கள். ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை இன்று பயன்பாட்டில் உள்ளது. மதுரை எய்ம்ஸ் ஜப்பான் நிதி உதவியுடன் பணிகள் நடைபெறும் என தெரிவித்து விட்டார்கள்.” என்று சொல்லி இருக்கிறார்.

ஜப்பானில் இருந்து எப்போது நிதி வருவது? இவர்கள் எப்போது தொடங்கு வது என்று தெரியவில்லை. இந்த உண்மைகளை மறைக்கவே காசி தமிழ்ச்சங்கம் நடத்துகிறார்கள். திருக்குறளையும். பாரதியாரையும் பயன் படுத்துவது இதற்காகத்தான்.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பதிலை பா.ஜ.க.வுக்குக் கொடுப்பார்கள்!

banner

Related Stories

Related Stories