தமிழ்நாடு

“கலைஞரின் பேனா சின்னம்.. போலி செய்தி பரப்பும் கும்பலுக்கு இந்த உண்மை தெரியுமா?” - Dr.சுலைமான் பதிலடி!

மொத்த கடற்பரப்பில் கலைஞரின் பேனா சின்னம் அமைய உள்ள பகுதியின் பரப்பளவு என்பது 0.0000005% ஆகும்.

“கலைஞரின் பேனா சின்னம்.. போலி செய்தி பரப்பும் கும்பலுக்கு இந்த உண்மை தெரியுமா?” - Dr.சுலைமான் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், கலைஞர் நினைவிட வளாகத்தின் அருகில் கடற்பரப்பினுள் சுமார் 360 மீட்டர் தொலைவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நினைவு சின்னத்தை அமைக்க பா.ஜ.க - அதிமுக மற்றும் பா.ஜ.கவின் பி டீம் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க சரியான காரணம் இல்லாததால், அற்ப விவயங்களை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“கலைஞரின் பேனா சின்னம்.. போலி செய்தி பரப்பும் கும்பலுக்கு இந்த உண்மை தெரியுமா?” - Dr.சுலைமான் பதிலடி!

இந்நிலையில் பலரும் பா.ஜ.க - அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில், திமுக சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் மருத்துவர் சுலைமான் வெளியிட்டுள்ள பதிவில், “1. கலைஞரின் பேனா சின்னம் அமைய இருக்கிற அந்த அடித்தளம் (pedestal) என்பது சுமார் 2,200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது வெறும் அரை (0.5) ஏக்கர் பரப்பளவு கொண்டது தான்.

2. அந்த அடித்தளம் என்பதுகூட, கடலில் கல்லைக்கொட்டி சிறியதொரு செயற்கை தீவு போன்ற ஒன்றை உருவாக்கப்போவதில்லை. Piling Method எனப்படும் தூண்களை அமைத்து அதன் மீது பீடம் அமைக்கப்பட இருக்கிறது.

“கலைஞரின் பேனா சின்னம்.. போலி செய்தி பரப்பும் கும்பலுக்கு இந்த உண்மை தெரியுமா?” - Dr.சுலைமான் பதிலடி!

3. கடலில் தூண்களை அமைத்து அதன்மீது பாலங்களையும் கட்டடங்களையும் கட்டும் செயல்பாடானது உலகெங்கும் ஆயிரக்கணக்கில் நடந்துக்கொண்டிருக்கிறது. இனியும் நடக்கதான் இருக்கிறது.

4. இந்தியாவில் தற்போது 95 மீன்பிடி துறைமுகங்கள் இருக்கின்றன. இன்னும் நூறு மீன்பிடி துறைமுகங்களாவது அடுத்த ஒரு நூற்றாண்டுக்குள் மேலும் கட்டப்படலாம். இவை அனைத்துமே கடல் பகுதிக்குள் தூண்களால் அமைக்கப்படுகிற கட்டுமானங்கள்தான்.

5. கலைஞரின் பேனா சின்னம் அமைய இருக்கிற பீடமானது, கலைஞரின் சமாதியில் இருந்து 650 மீட்டர் தொலைவில் உள்ளது. மிகச்சரியாக கடற்கரையில் இருந்து 300 மீட்டருக்கும் குறைவான நீளம். நம் ஊர்களில் உள்ள பல மீன்பிடி துறைமுகங்கள் நீளம் இதைவிட மும்மடங்கு அதிகம்.

6. இன்னொரு செய்தி பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். சிலர் தெரிந்தும் மறைக்கலாம், தற்போது அனுதினமும் கன்டெய்னர் லாரிகளால், வடசென்னை பகுதியில் ஏற்படும் சாலை போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தினை முன்னெடுத்திருக்கிறது.

“கலைஞரின் பேனா சின்னம்.. போலி செய்தி பரப்பும் கும்பலுக்கு இந்த உண்மை தெரியுமா?” - Dr.சுலைமான் பதிலடி!

சென்னை துறைமுகத்தில் இருந்து, எர்ணாவூர் ஜங்க்சன் வரை, 7.6 கி.மீ நீளத்திற்கு கடல் மேல் பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஒரே சமயத்தில் 4 கண்டெய்னர் லாரிகள் வந்து செல்லும்விதமாக 4-லேன் சாலையாக அதன் அகலம் இருக்கும்.

7. துபாயில் கடல் மீது எழுப்பப்பட்டுள்ள பிரம்மாண்டமான செயற்கை தீவுகள் The Palm Jumeirah, Dubai, UAE, ஜப்பானில் கடல் மீது எழுப்பப்பட்டிருக்கும் விமான நிலையம், சிங்கப்பூரில் கடல் மீது விரிவுபடுத்தப்பட்டிருக்கும் நகரம் Marina Bay Sands, நெதர்லாண்டில் கடல் நீரை மறித்து தேக்கிவைக்கப்படும் பிரம்பாண்ட அணைக்கட்டுகள், மாலத்தீவு , மௌரீஷியஸ் கடலோர சுற்றுலாத்தலன்ஙளில் உள்ள கடலுக்கடியில் வசிக்கும்படியான உல்லாச விடுதிகள், என்பனவற்றையெல்லாம் நாம் உதாரணங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையில், ஒரு மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமானத்தைவிட மிகச் சிறிய அதிலும் மிகக் குறைந்த செலவில் கட்டப்பட இருக்கிற ஒரு நினைவுச் சின்னம்தான் கலைஞரின் பேனா.

“கலைஞரின் பேனா சின்னம்.. போலி செய்தி பரப்பும் கும்பலுக்கு இந்த உண்மை தெரியுமா?” - Dr.சுலைமான் பதிலடி!

8. தீவுகளை இணைக்கும் பாலங்கள், பெரிய துறைமுகங்கள், சிறிய மீன்பிடி துறைமுகங்கள், கப்பல் கட்டுமான தொழிற்சாலைகள், எண்ணெய் கிணறுகள், மின்சாரம் உற்பத்தி செய்யும் காத்தாடிகள், கடல் நீரை தேக்கும் அணைக்கட்டுகள், ஊருக்குள் இடம் இல்லாமல் கடல்மீது விரிவுபடுத்தப்படும் நகரங்கள், இப்படி ஏராளமான கட்டுமானங்கள் கடல்மீது செய்லபடுத்தப்படுகின்றன.

முக்கியமாக 2020ஆம் ஆண்டு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மனிதர்களால் கடல்மீது கட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்களின் மொத்த பரப்பளவு எவ்வளவு என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அது மொத்தம் 30,000 சதுர கி.மீ அளவிற்கு கட்டுமானங்கள் இருப்பதாகவும், அது மொத்த கடற்பரப்பில் 0.008 சதவிகிதம் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள்.

"In a world-first, the extent of human development in oceans has been mapped. An area totalling approximately 30,000 square kilometres -- the equivalent of 0.008 percent of the ocean -- has been modified by human construction, a study led by Dr Ana Bugnot from the University of Sydney School of Life and Environmental Sciences and the Sydney Institute of Marine Science has found."

எனவே, முப்பதாயிரம் சதுர கி.மீ பரப்பளவுக்கு முன்னால் 2200 சதுர மீட்டர் என்பது ஒரு தூசியின் துகள் அளவு கூட கிடையாது. சரியாக சொல்லவேண்டும் என்றால், மொத்த கடற்பரப்பில் கலைஞரின் பேனா சின்னம் அமைய உள்ள பகுதியின் பரப்பளவு என்பது 0.0000005% ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories