தமிழ்நாடு

“உனக்கு அவ்வளவு திமிரா? நான் யார் தெரியுமா?” : கால் டாக்சி ஓட்டுநரை தாக்கிய ஆளுநரின் ஆலோசகர் மீது புகார்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் மீது கால் டாக்சி ஓட்டுநர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“உனக்கு அவ்வளவு திமிரா? நான் யார் தெரியுமா?” : கால் டாக்சி ஓட்டுநரை தாக்கிய ஆளுநரின் ஆலோசகர் மீது புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம், நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து முகலிவாக்கம் வரை ஓலா கார் புக் செய்துள்ளார். இந்நிலையில், காரில் பயணித்த திருஞானசம்பந்தம், இறங்குவதாக புக் செய்த இடத்தை தாண்டி விதிகளை மீறி ஊடக ஆலோசகர் தொடர்ந்து காரை இயக்கக் கூறியதால், ஓலா கேப் ஓட்டுநர் திருநாவுக்கரசர், ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

“உனக்கு அவ்வளவு திமிரா? நான் யார் தெரியுமா?” : கால் டாக்சி ஓட்டுநரை தாக்கிய ஆளுநரின் ஆலோசகர் மீது புகார்!

இதில், வாக்குவாதம் முற்றியதில், திருஞானசம்பந்தம் தன்னைத் தாக்கியதாக ஓலா கேப் டிரைவர் போலிஸாரிடம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் ஓலா கேப் ஓட்டுநரை தாக்கியதாக போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான வீடியோவையும் புகாருடன் அளித்துள்ள நிலையில் போலிஸார் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஓட்டுநர் திருஞானசம்பந்தம் கூறுகையில், “குடும்ப சூழ்நிலை காரணமாக ஓலா கால் டாக்சியில் ஓட்டுனராக பணிபுறிந்து வருகிறேன். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை விமான நிலையம் முதல் போரூர் வரை செல்ல தனது வாகனத்தை திருஞானசம்பந்தம் என்பவர் முன்பதிவு செய்தார்.

“உனக்கு அவ்வளவு திமிரா? நான் யார் தெரியுமா?” : கால் டாக்சி ஓட்டுநரை தாக்கிய ஆளுநரின் ஆலோசகர் மீது புகார்!

அவர் பதிவு செய்த திட்டத்தில் காத்திருப்பு திட்டம் என்று இல்லை, பயணி ஏறிவுடன் இறங்கும் இடம் வரை நேரடியாக அழைத்து சென்று விடும் திட்டத்தை அவர் தேர்வு செய்த நிலையில், பயணி திருஞானசம்பந்தம் கிண்டி கத்திபாரா வந்த போது, ஏ.டி.எம் நிறுத்த சொன்னார்.

அவர்கேட்ட 10 நிமிடம் கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டார். பிறகு மேலும் தனியார் உணவகத்தில் 10 நிமிடம் நிற்க கூறினார். எனது வேலை பலு காரணமாக அவர் கூறிய போது, தயவு செய்து அடுத்த வாகனம் பதிவு செய்யுமாறு நான் கூறினேன்.

அப்போது பயணி திருஞானசம்பந்தம் என்பவர் உனக்கு அவ்வளவு திமிரா நான் யார் ? என் பின்புலம் என்வென்று தெரியுமா ? என்று மிரட்டியபடி வந்து கண்ணத்தில் அடித்தார். நான் எவ்வளவு பெரிய ஆள் என்று தெரியுமா என்று கூறி பயங்கரமாக தாக்கினார். அதை செல்போனில் பதிவு செய்தபோது செல்போனை தட்டிவிட்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories