தமிழ்நாடு

ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகையுடன் வடமாநில தொழிலாளி தலைமறைவு.. கோவையில் அதிர்ச்சி !

கோவையில் நகை பட்டறை உரிமையாளரை ஏமாற்றி தொழிலாளர் ஒருவர் நகையுடன் தலைமறைவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகையுடன் வடமாநில தொழிலாளி தலைமறைவு.. கோவையில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் சாலையை சேர்ந்த பியூஸ் ஜெயின்(35) என்பவர் நகைப் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.

நகைப் பட்டறையில் உள்ள நகைகளில் மெல்லிய துவாரங்களை பூசுவதற்காக அருகிலுள்ள நகை கடையில் கொடுக்குமாறு ரூ.25 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் எடையுள்ள நகைகளை சதாம் உசேனிடம் பட்டறை உரிமையாளர் பியூஸ் ஜெயின் கொடுத்துள்ளார்.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகையுடன் வடமாநில தொழிலாளி தலைமறைவு.. கோவையில் அதிர்ச்சி !

சதாம் உசேன் கடந்த சில நாட்களாக இதே வேலையே செய்து வருவதால் அவரிடம் நம்பி பிரேஸ்லெட், கம்மல் உள்ளிட்ட நகைகளை கொடுத்துள்ளார். எப்போதும் சிறிது நேரத்தில் திரும்பிவிடும் சதாம் உசேன் இந்த முறை நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் பதற்றமான பியூஸ் ஜெயின் சதாம் உசேன் போனுக்கு கால் செய்துள்ளார்.

ஆனால், அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த பியூஸ் ஜெயின் இது தொடர்பாக, ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் நகையுடன் காணாமல் போன சதாம் உசேனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகையுடன் வடமாநில தொழிலாளி தலைமறைவு.. கோவையில் அதிர்ச்சி !

கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்களை வைத்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கோவையில் நகை பட்டறை உரிமையாளரை ஏமாற்றி தொழிலாளர் ஒருவர் நகையுடன் தலைமறைவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories