தமிழ்நாடு

“எய்ம்ஸ் எங்கே?.. செங்கலோடு களம் இறங்கிய தோழர்கள்” - பாஜக யாத்திரை - மோடியை ரவுண்டு கட்டி அடித்த சிபிஎம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் டிசைனுக்கான டெண்டர் கூட கொடுக்கப்படாத நிலையில், அண்ணாமலை செல்லும் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரையாக தான் அமையும் என கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

“எய்ம்ஸ் எங்கே?.. செங்கலோடு களம் இறங்கிய தோழர்கள்” - பாஜக யாத்திரை - மோடியை ரவுண்டு கட்டி அடித்த சிபிஎம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"எங்கள் எய்ம்ஸ் எங்கே?" எனும் தலைப்பில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் பழங்காநத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தொடர்முழக்க போராட்டத்தில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, தி.மு.க எம்.எல்.ஏ தளபதி, ம.தி.மு.க எம்.எல்.ஏ பூமிநாதன் உள்ளிட்டோர் செங்கல்லை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

“எய்ம்ஸ் எங்கே?.. செங்கலோடு களம் இறங்கிய தோழர்கள்” - பாஜக யாத்திரை - மோடியை ரவுண்டு கட்டி அடித்த சிபிஎம்!

எம்.பி. சு.வெங்கடேசன் பேசுகையில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறும் போது கூட, அவர்களால் கல்லூரியை கண்ணால் பார்க்க முடியாது. கண்ணால் பார்க்க முடியாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் ஒரே பிரதமர் மோடி தான்.

ஏன் பிரதமர் மோடி படிக்காமலேயே பட்டம் பெற்றவர் தான். அது தொடர்பான வழக்கு கூட நிலுவையில் உள்ளது. படிக்காமலேயே பட்டம் வாங்கிய பிரதமரால், கல்லூரியை பார்க்காமலேயே மாணவர்கள் பட்டம் வாங்கும் அவலத்தை மாற்றவே போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

“எய்ம்ஸ் எங்கே?.. செங்கலோடு களம் இறங்கிய தோழர்கள்” - பாஜக யாத்திரை - மோடியை ரவுண்டு கட்டி அடித்த சிபிஎம்!

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டிசைன் தயாரிப்பதற்கான டெண்டரே இன்னும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறாராம். அது பாதயாத்திரை அல்ல, மோடி அரசுக்கான இறுதி யாத்திரை.

பாத யாத்திரையின் போது மதுரை பக்கம் வந்தால் எய்ம்ஸ் எங்கே என மக்கள் கேட்டால் அண்ணாமலை என்ன சொல்வார்?கவர்னர் தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கிறார். பிரதமர் தமிழ்நாட்டையே அழிக்க நினைக்கிறார்." என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டு மக்களுடைய நீண்ட கால கோரிக்கையான எய்ம்ஸ் திட்டம் மதுரையில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுகிற முறையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

“எய்ம்ஸ் எங்கே?.. செங்கலோடு களம் இறங்கிய தோழர்கள்” - பாஜக யாத்திரை - மோடியை ரவுண்டு கட்டி அடித்த சிபிஎம்!

நான்கு ஆண்டுகள் முடிவடைகிற நிலையில், இன்று வரை ஒரு கைப்பிடி மண்ணைக் கூட அகற்ற நடவடிக்கை இல்லை. ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. மதுரையில் அடிக்கல் நாட்டிய பிறகு பல மாநிலங்களில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டு, மத்திய அரசு ஏராளமாக நிதி ஒதுக்கி அந்த கட்டிடப் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழா நடக்கும் நிலையில் உள்ளது.

பல இடங்களில் கல்லூரிகள் மருத்துவமனைகள் செயல்பட தொடங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மட்டும் இன்னும் தொடக்க நிலையிலே இருக்கிறது. எனவே தான் இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றக் கட்சியுடன் இணைந்து இந்த போராட்டம் நடந்துள்ளது.

“எய்ம்ஸ் எங்கே?.. செங்கலோடு களம் இறங்கிய தோழர்கள்” - பாஜக யாத்திரை - மோடியை ரவுண்டு கட்டி அடித்த சிபிஎம்!

வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய நிதிநிலை அறிக்கையில் மதுரை எய்ம்ஸ்-க்கு முதல் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து வேண்டும். நிர்மலா சீதாராமன் மோடி அரசும் அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றால், அதற்குப் பிறகு அடுத்த கட்டமாக தென் மாவட்டங்களை எல்லாம் இணைத்து மிகப் பிரமாண்டமான போராட்டங்களில் நடத்துவதுதற்காக இது தொடக்கப் போராட்டம் இது.

ஒன்றிய அரசு இது மட்டுமல்ல, சேது சமுத்திர திட்டத்தையும் இன்று கிடப்பில் போட்டுள்ளது. எனவே அதனையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அடுத்தடுத்த தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய மோடி அரசை எதிர்த்து தமிழகத்தை திரட்டி வலுவான போராட்டங்களில் நடத்துவதற்கு நாங்கள் திட்டமிடுகிறோம்” என்றும் தெரிவித்தார்

banner

Related Stories

Related Stories