தமிழ்நாடு

AR.ரகுமான் ஃபிலிம் சிட்டியில் விபத்து.. படப்பிடிப்பின் போது கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி !

திருவள்ளூர் அருகே ஏ.ஆர். ரகுமான் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பின் போது 40 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

AR.ரகுமான் ஃபிலிம் சிட்டியில்  விபத்து.. படப்பிடிப்பின் போது கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர் கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.பிலிம் சிட்டி என்ற பெயரில் படப்பிடிப்பு தளம் உள்ளது. இங்கு பிரபல திரைப்படங்கள் இசையமைப்பது மற்றும் படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் அங்கு சில தினங்களாக நடிகர் சத்யராஜ் நடித்து வெளியாக உள்ள வெப்பன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக இன்று அதிகாலை படப்பிடிப்பிற்காக சுமார் 40 அடி உயரத்தில் சென்னை சாலிகிராமத்தைச் சார்ந்த குமார் 47 என்ற தொழிலாளி மின்விளக்குகளை அமைப்பதற்காக ஏறியுள்ளார்.

AR.ரகுமான் ஃபிலிம் சிட்டியில்  விபத்து.. படப்பிடிப்பின் போது கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி !

அப்போது அவர் மேலே ஏறுவதற்கான எவ்வித பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் வேலை செய்து வரும் போது, அவரது கால் தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஃபிலிம் சிட்டியின் பணியாளர்கள் அவரை மீட்டு உடனடியாக பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அவர் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள உயிரிழந்த குமார் என்பவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories