இந்தியா

“தடை.. அதை உடை..” : 25 வயதில் சிவில் நீதிபதியாகும் தலித் பெண் - குவியும் பாராட்டு !

கர்நாடக உயர் நீதிமன்ற சிவில் நீதிபதியாக 25 வயது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் தேர்வு...

“தடை.. அதை உடை..” : 25 வயதில் சிவில் நீதிபதியாகும் தலித் பெண் - குவியும் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கர்நாடகாவின் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி - வெங்கடலட்சுமி தம்பதியின் 25 வயது மகள் காயத்ரி கலந்துகொண்டு தேர்வு எழுதினார்.

இதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பங்காருபேட்டையை சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

மிக இளம்வயதிலேயே சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள காயத்ரி பங்காருபேட்டை அருகே காரஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தய்யா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அவர் பல்கலைக்கழக அளவில் 4-வது இடத்தை பிடித்து இருந்தார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த காயத்திரி கடின உழைப்பால் இன்று சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories