தமிழ்நாடு

தொடர்ந்து அவதூறு பரப்பும் விஷமிகள்.. வீடியோ ஆதாரத்தோடு கேள்வி எழுப்பிய RK.நகர் MLA !

தொடர்ந்து அவதூறு பரப்பும் விஷமிகள்.. வீடியோ ஆதாரத்தோடு கேள்வி எழுப்பிய RK.நகர் MLA !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், தொழில்வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான குறியீடுகளை அடையும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. வளர்ச்சி என்பதை தொழில் வளர்ச்சியாக மட்டுமில்லாமல் சமூக வளர்ச்சியாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமுதாயம் எழுந்து நிற்க எது தேவையோ அதனை அடையத் துடிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் இன்றைய 'திராவிட மாடல்' அரசானது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கு முன்னுதாரணமான ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து அவதூறு பரப்பும் விஷமிகள்.. வீடியோ ஆதாரத்தோடு கேள்வி எழுப்பிய RK.நகர் MLA !

உண்மை இவ்வாறாக இருக்க, தி.மு.க அரசின் மீது வீண்பழியை சுமத்தவேண்டும் என்றே, திட்டமிட்டு பொய் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பாணியை பா.ஜ.க - அ.தி.மு.க கும்பல்கள் செயல்படுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் என்றால், தன்னை மிகப்பெரிய சிந்தனையாளராகக் கருத்திக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுடன் நிற்பதாகக் கூறி, விளம்பரத்தை தேடிக்கொள்ளும் நபர்கள் பலரும் தி.மு.க அரசை காரணமே இல்லாமல் விமர்சித்து வரும் போக்கும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில், சமீபத்தில் கூட, தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணை, தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தரமற்ற சாலைகளால்தான், உயிரிழந்ததாக கூறி அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தி வந்தனர்.

தொடர்ந்து அவதூறு பரப்பும் விஷமிகள்.. வீடியோ ஆதாரத்தோடு கேள்வி எழுப்பிய RK.நகர் MLA !

பின்னர் அது ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலையில் கீழ் இருப்பதாக தெரிந்த பின்னர் சத்தமில்லாமல் கழண்டுக்கொண்ட நிகழ்வெல்லாம் அரங்கேறியது. இதற்கிடையில் உண்மை என்னவென்றே தெரியாமல், தி.மு.க எம்.எல்.ஏ தூய்மை பணியாளரை வற்புறுத்தி கையால் மலக் கழிவுகளை அகற்றச் சொன்னதாக வெளியான போலி செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தின் உண்மை தன்மை என்னவென்றே தெரியாமல் இதனை கையில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மீது ஒரே மாதிரியான பழியைப் போட்டுள்ளார்கள். சமூக வலைதளங்களில் வெளிச்சம் தேடும் பலருக்கும் இது சம்பந்தமாக பதிலடி கொடுத்துள்ளார் தி.மு.க எம்.எல்.ஏ.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ எபினேசர், இன்று “உங்களை தேடி தினந்தோறும் உங்கள் MLA " என்ற தலைப்பில் ஆய்வு செய்து அரசு அலுவலர்களுடன் அனைத்து தெருக்களுக்கும் வீடுவீடாக சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் செய்து கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தண்ணீர் குழாயிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற்றும் தொட்டியில் சல்லி கற்கல் இல்லாததால் தண்ணீர் தேங்கி கழிவு நீராக காட்சி அளித்தது. இதனைக்கண்ட எம்.ஏல்.ஏ அதனை சுத்தப்படுத்தகோரி மாநகராட்சி அதிகாரியை எச்சரித்தார். மேலும், “நீங்க செய்யலான நான் வேணா கிளீன் பண்ணட்டுமா கை விட்டு” என்றார்.

தொடர்ந்து அவதூறு பரப்பும் விஷமிகள்.. வீடியோ ஆதாரத்தோடு கேள்வி எழுப்பிய RK.நகர் MLA !

இந்நிலையில் இதுதொடர்பாக ஷாலின் மரியா லாரன்ஸ் என்பவர், “ தி.மு.க எம்.எல்.ஏ., மாநகராட்சி துப்புரவு தொழிலாளியை தனது கையால் சாக்கடையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்” என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஷாலின் மரியா லாரன்ஸ் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த தி.மு.க எம்.எல்.ஏ எபினேசர், “இது நியாயமற்றது. மாநகராட்சி துப்புரவு பணியாளரை எம்எல்ஏ கட்டாயப்படுத்தினார் என்ற வார்த்தையை நீக்கவில்லை என்றால், இது குறித்து புகார் அளிப்பேன். என்னிடம் முழு காட்சிகள் உள்ளன. அந்த தொழிலாளியிடம் கூட நான் பேசவில்லை. முதலில் அது வடிகால் அல்ல, குடிநீர் அடைப்பு.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories