தமிழ்நாடு

“அண்ணாமலை ஊடகங்களை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்ட வேண்டும்” : கடுமையாக எச்சரித்த சென்னை ப்ரஸ் கிளப் !

அண்ணாமலை ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.

“அண்ணாமலை ஊடகங்களை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்ட வேண்டும்” : கடுமையாக எச்சரித்த சென்னை ப்ரஸ் கிளப் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை ஊடகங்களில் தன்னுடையே பெயர் எப்படியாவது வரவேண்டும் என்பதற்காக தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதையே தனது உத்தியாக கடைபிடித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் வரை படித்து பட்டம் பெற்ற அண்ணாமலை, தான் பேசுவதில் துளியும் உண்மை இல்லை என்பதை தெரிந்தும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி, ஊடகங்களில் பிரபலமானார்.

தமிழ்நாடு அரசு பல சிறப்புத் திட்டங்களை கொண்டுவந்தாலும் எதையாவது பேசி, தன்னுடையே இருப்பை காட்டிக்கொள்ள அற்ப அரசியலை மேற்கொள்ளும் நபராக அண்ணாமலை இருக்கிறார் என்ற எண்ணம் சொந்தக் கட்சிக்காரர்களிடமே உள்ளது.

“அண்ணாமலை ஊடகங்களை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்ட வேண்டும்” : கடுமையாக எச்சரித்த சென்னை ப்ரஸ் கிளப் !

அடுத்தடுத்து ஆபாச வீடியோ, ஆடியோ மற்றும் பாலியல் சர்ச்சை புகார்களில், பா.ஜ.க.வில் இருந்த பலரும் வெளியேறி வருகின்றனர். அந்தவகையில், பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் மீது சமீபத்தில் நடவடிக்கை எடுத்தார் அண்ணாமலை.

அதன்பின்னர், அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கட்சியில் உளவு பார்க்கும் வேலை அதிகரித்துவிட்டதாகவும், சொந்த கட்சி பெண்களுக்கே கட்சியில் உள்ளவர்களால் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் காய்த்ரி ரகுராம்.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வழக்கம்போல பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தினறி, வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்.

“அண்ணாமலை ஊடகங்களை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்ட வேண்டும்” : கடுமையாக எச்சரித்த சென்னை ப்ரஸ் கிளப் !

மேலும் பத்திரிக்கையாளரை தரைகுறைவாகவும் பேசியுள்ளார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியும், ஊடகங்களை இழிவுப்படுத்தும் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இன்று (04-01-2023) புதன்கிழமை காலை சென்னையில் பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

புதியதலைமுறை செய்தியாளர் இரா.முருகேசன், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் குறித்து எழுப்பிய கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை.

“அண்ணாமலை ஊடகங்களை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்ட வேண்டும்” : கடுமையாக எச்சரித்த சென்னை ப்ரஸ் கிளப் !

ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள் , எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல. .இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசியலில் வளர்ந்து வரும் அண்ணாமலை ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும். யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127” என எச்சரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories