தமிழ்நாடு

“நான் PlayBoyதான்.. ஆனால்” : ஆபாச ஆடியோவில் சிக்கிய பாக். முன்னாள் பிரதமர்: இம்ரான் கான் அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பாலியல் ரீதியாக பெண்ணிடம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“நான் PlayBoyதான்.. ஆனால்” : ஆபாச ஆடியோவில் சிக்கிய பாக். முன்னாள் பிரதமர்: இம்ரான் கான் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பாலியல் ரீதியாக பெண்ணிடம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் செய்யது அலி ஹைதர் என்பவர் சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த ஆடியோவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசியவது போல இருந்தது. இதனால் இந்த ஆடியோ விவகாரம் பாகிஸ்தானில் மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த ஆடியோ போலியானது என இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த நிர்வாகி அர்ஸ்லன் காலித் தெரிவித்திருகிறார். இதுதொடர்பாக செய்தியாளரை சந்தித்த இம்ரான் கான், “கடந்த ஆகஸ்ட் 2022ல் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஸ்வானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆடியோ உள்ளதாக தெரிவித்திருந்தார்

மேலும் என்னை பிளே பாய் எனவும் கூறியிருந்தார். ஆம் நான் ஒரு காலத்தில் பிளேபாய்தான். அதேவேளையில் என்னை ஒருபோது நல்லவன், ஏஞ்சல் என்றால் ஒருபோதும் கூறியதில்லை. இதுபோன்ற வீடியோ மற்றும் ஆடியோவை நாம் நாட்டின் இளைஞர்களுக்கு தரப்போகிறோமா என்பதை சிந்தியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories