தமிழ்நாடு

"இந்தியில் பேசு": CRPF வீரர்களால் நடிகர் சித்தார்த் அவமதிப்பு: மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

இந்தியில் பேசச் சொல்லி மதுரை விமான நிலையத்தில் CRPF வீரர்கள் அவமானப்படுத்தியதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார்.

"இந்தியில் பேசு":  CRPF வீரர்களால் நடிகர் சித்தார்த் அவமதிப்பு: மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் சித்தார்த் எப்போதும் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார். அதிலும் குறிப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிப்படையாகவே எதிர்த்து வருகிறார்.

ஒன்றிய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா முதல் இந்தி திணிப்பு வரை எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக வைத்துள்ளார். இவரை பா.ஜ.க-வினர் விமர்சித்த போது எல்லாம் சமூக அநீதிக்கு எதிராக நான் தொடர்ந்து பேசுவேன் என துணிச்சலுடன் காவி கூட்டத்திற்குப் பதிலடி கொடுத்தவர் இவர்.

"இந்தியில் பேசு":  CRPF வீரர்களால் நடிகர் சித்தார்த் அவமதிப்பு: மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

இந்நிலையில், இந்தியில் பேசச் சொல்லி மதுரை விமான நிலையத்தில் CRPF வீரர்கள் அவமானப்படுத்தியதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "மதுரை விமான நிலையத்திற்கு எனது பெற்றோர்களுடன் சென்றேன். அப்போது அங்கு இருந்த CRPF வீரர்கள் எங்களிடம் இந்தியிலேயே தொடர்ந்து பேசினர்.

"இந்தியில் பேசு":  CRPF வீரர்களால் நடிகர் சித்தார்த் அவமதிப்பு: மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

நான் ஆங்கிலத்தில் பேசுங்கள் என கூறினேன். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து இந்தியிலேயே பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது. இந்தியாவில் இப்படிதான் இருக்கும் என்று கூறினர்" என பதிவிட்டுள்ளார். இதையடுத்து நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவருக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories