தமிழ்நாடு

“சாதிய தீண்டாமை எதுவாக இருந்தாலும் புகார் அளிக்கலாம்” : whatsapp நம்பரை வெளியிட்ட புதுக்கோட்டை ஆட்சியர் !

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

“சாதிய தீண்டாமை எதுவாக இருந்தாலும் புகார் அளிக்கலாம்” : whatsapp நம்பரை வெளியிட்ட புதுக்கோட்டை ஆட்சியர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் வேங்கைவயலில், ஆதி திராவிட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, தலைமுறை தலைமுறையாக அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வதற்கு பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்து புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு அதிரடி காட்டினார்.

“சாதிய தீண்டாமை எதுவாக இருந்தாலும் புகார் அளிக்கலாம்” : whatsapp நம்பரை வெளியிட்ட புதுக்கோட்டை ஆட்சியர் !

அப்போது பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக சம்பவத்தின் போது கோயில் முன்பு சாமியாடிய கோயில் பூசாரி ராஜன் மனைவி சிங்கம்மாள் என்ற பெண்மணி மீதும், அதேபோல அதே கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பன் என்பவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெள்ளனுர் போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு டீ வழங்குவதில் இரட்டை குவளை முறையை கடைப்பிடித்து பாகுபாடு காட்டியதாக அந்த கிராமத்தில் டீக்கடை வைத்துள்ள மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெள்ளனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

“சாதிய தீண்டாமை எதுவாக இருந்தாலும் புகார் அளிக்கலாம்” : whatsapp நம்பரை வெளியிட்ட புதுக்கோட்டை ஆட்சியர் !

இதில் சிங்கம்மாள், மூக்கையா ஆகிய இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இறையூர் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அய்யனார் கோயிலிலும் அதே போல் தண்ணீர் தொட்டி பகுதியிலும் போலிஸார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் மேற்கண்ட குற்றங்கள் எந்த வடிவில் இருந்தாலும் பின்வரும் கைபேசி எண்ணிற்கு 9443314417 புலனம் (Whatsapp) மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories