தமிழ்நாடு

ரயில்வேயில் வேலை வாங்கித் தருகிறோம்.. சக கட்சிக்காரரிடமே 9 லட்சம் மோசடி செய்த பாஜக மாவட்ட செயலாளர் கைது!

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 9 லட்சம் மோசடி செய்த விருதுநகர் பா.ஜ.க.மேற்கு மாவட்ட செயலாளர் கலை அரசனனை போலிஸார் கைது செய்தனர்.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருகிறோம்.. சக கட்சிக்காரரிடமே 9 லட்சம் மோசடி செய்த பாஜக மாவட்ட செயலாளர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவராக இருப்பவர் பாண்டியன். இவரது மூத்த மகன் கார்த்திக்கிற்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும்,இரண்டாவது மகன் முருகதாஸ் என்பவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ் குமார் மற்றும், மாவட்டச் செயலாளர் கலையரசன் ஆகியோர் கடந்த 2017 ம் ஆண்டு ரூபாய் 11 லட்சம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால் கடந்த 5 வருடமாக வேலையும் வாங்கி தராமல், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இருந்ததால், பாண்டியன் மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் தலா ரூபாய் 2 லட்சத்திற்கு 5 காசோலைகளும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு ஒரு காசோலையும், பாண்டியனிடம் கொடுக்கப்பட்டது.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருகிறோம்.. சக கட்சிக்காரரிடமே 9 லட்சம் மோசடி செய்த பாஜக மாவட்ட செயலாளர் கைது!

மேலும், ரூபாய் 2 லட்சம் ரொக்க பணம் கொடுத்து ஒரு காசோலையை மட்டும் திரும்ப பெற்றுள்ளனர். மீதமுள்ள காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. மீதி 9 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டும் தராத நிலையில், வங்கி காசோலையும் பணம் இன்றி திரும்பியதால், சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது பாண்டியன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கலையரசனை மட்டும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். சுரேஷ்குமார் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories