வைரல்

கர்நாடகா: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியரை ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய சக மாணவிகள் !

இரவு நேரத்தில் விடுதி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை சக மாணவிகள் கட்டையை கொண்டு துரத்தி தாக்கியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியரை ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய சக மாணவிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ளது காட்டேரி அரசுப்பள்ளி. இங்கு பயிலும் மாணவிகள் பலரும் அங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியாராக பணிபுரிந்து வரும் சின்மயானந்த் என்பவர் மாணவிகள் விடுதி அருகே மற்றொரு கட்டிடத்தில் தங்கியுள்ளார்.

குடிபோதைக்கு அடிமையான இவர், அடிக்கடி மாணவிகள் விடுதியை நோட்டமிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவிகள் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் விடுதிக்குள் நுழைந்துள்ளார். மேலும் அங்கிருந்த ஓவர் மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

கர்நாடகா: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியரை ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய சக மாணவிகள் !

இதில் பாதிக்கப்பட்ட மாணவி, விடுதியில் தங்கியிருக்கும் சக மாணவிகளிடம் கூற, உடனே அவர்கள் கட்டை, கம்புகளுடன் ஆசிரியரை ரவுண்டு கட்டினர். மேலும் தலைமை ஆசிரியரை மாணவிகள் சரமாரியாக தாக்கினர். அவர் ஒரு அறைக்குள் போய் மறைத்துக்கொள்ள நினைத்தபோதிலும், மாணவிகள் விடாமல் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், ஆசிரியரை கைது செய்தனர். தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்கள் இது குறித்த சம்பவத்திற்கு பல்வேறு கண்டங்களை எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக இதே போன்று ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு ஆபாச படங்கள் போட்டு காட்டியது தொடர்பாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மாணவிகள் இது போன்று ஆசிரியரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகா: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியரை ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய சக மாணவிகள் !

இரவு நேரத்தில் விடுதி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை சக மாணவிகள் கட்டையை கொண்டு துரத்தி தாக்கியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories