தமிழ்நாடு

“ஜெயலலிதா சிலையை அனுமதியின்றி நிறுவ முயன்ற OPS அணி” : சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலிஸ் !

புதுக்கோட்டை எம்.ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா சிலையை அனுமதியின்றி அதிமுகவினர் நிறுவ இருந்த நிலையில் போலிஸார் சிலை எடுத்து வந்த வாகனத்துடன் சிலையையும் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

“ஜெயலலிதா சிலையை அனுமதியின்றி நிறுவ முயன்ற OPS அணி” : சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டையில் நெல்லுமண்டி தெருவில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் புதிய அதிமுக மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவிற்கு முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வருகை தந்தனர்.

இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் குறித்த அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் இதற்கு முன்னதாக சிறிய ரக சரக்கு வாகனத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை எடுத்து வந்து எம்ஜிஆர் சிலை அருகே அனுமதி இன்றி வைத்தியலிங்க முன்னிலையில் ஜெயலலிதா சிலையை நிறுவ போவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அந்த சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories