தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்: அது என்ன தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்: அது என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (03.12.2022) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி ஆற்றிய உரை:-

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுதான் தமிழர் போற்றிய பண்பாடு! அந்த அடிப்படையில் நாட்டு எல்லைகளைத் தாண்டிய நாளாக உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துயிரும் ஒன்றென எண்ணி நாம் வாழ்வோம். உலக மாற்றுத்திறனாளிகள் நாளான இன்று, ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். என்ன என்று ஓரளவுக்கு நீங்களும் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்: அது என்ன தெரியுமா?

வருவாய்த் துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 இலட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ஆம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 263 கோடியே 58 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்: அது என்ன தெரியுமா?

ஆடுகளை மேய்ப்பவர், ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கி சுமந்து வருகிறார் என்றால், அந்த ஆடு நடக்க முடியாத நிலையில் இருக்கும். இதுதான் சமூகநீதி என்று எளிமையான விளக்கத்தை சொன்னவர் யார் தெரியுமா? நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அத்தகைய சமூகநீதிச் சிந்தனையின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் இந்த அரசானது, எப்போதும் எந்தச் சூழலிலும் அனைத்து மக்களின் அரசாக இருக்கும்! அதிலும் குறிப்பாக, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களின் அரசாக இருக்கும்! அவர்களுக்காகவே திட்டமிடும் அரசாக இருக்கும்! அவர்களில் ஒருவராக இருந்து அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அரசாகவே இருக்கும்! என்று கூறி, உலக மாற்றுத்திறனாளிகள் நாளில், உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories