தமிழ்நாடு

புத்தக கண்காட்சியை பெரும் திருவிழாவாக மாற்றிவிட்டார்.. மாவட்ட ஆட்சியரை பாராட்டிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் !

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சிறப்பாக நடத்தியதாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் பாராட்டியுள்ளார்.

புத்தக கண்காட்சியை பெரும் திருவிழாவாக மாற்றிவிட்டார்.. மாவட்ட ஆட்சியரை பாராட்டிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தனராக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அளிக்கப்பட்டிருந்தார். இந்த புத்தக கண்காட்சியை சிறப்பாக நடத்திய மாவட்ட ஆட்சியர் குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் "விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே. மேகநாத ரெட்டி ஒரு அற்புதமான இளைஞர். விருருநகர் முதல் புத்தகக் கண்காட்சியை பெரும் திருவிழாவாக மாற்றிவிட்டார். வாசிப்பை ஊக்கப்படுத்த எத்தனையோ முன்னெடுப்புகள் செய்திருக்கிறார். 200 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குபவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக ஆறாயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக நான்காயிரம் ரூபாயும் தினம் தினம் வழங்கப்படுகின்றன. நேற்று 200 ரூபாய்கு புத்தகம் வாங்கி 10.000 வென்ற மாணவி ஒருவருக்கு இந்தப் பரிசை வழங்கினேன்.

புத்தக கண்காட்சியை பெரும் திருவிழாவாக மாற்றிவிட்டார்.. மாவட்ட ஆட்சியரை பாராட்டிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் !

புத்தகக் கண்காட்சிக்கு தினமும் வரும் விருந்தினர்களை உபசரிக்க இரண்டு துணை ஆட்சியர்கள், இரண்டு தாசில்தார்கள், இரண்டு துணை தாசிதார்கள், சூப்பிரண்டுகள் உள்ளிட்ட பத்துப்பேர் கொண்ட குழுவையே அமைத்து பயண ஏற்பாடுகள், தங்குமிடம், உணவு என எதிலும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். அந்தக் குழுவில் உள்ள மாவட்ட துணை ஆட்சியர் திருவாசகம் மிகுந்த தமிழ் ஆர்வலர். நான் நீண்ட தூரம் காரில் அல்லது ரயிலில வருவதில் உள்ள சிரமங்களை கூறியதும் " என்ன சார் உங்களுக்கு எது தேவையோ அதைச் செய்வோம் " எனக்கூறி எனக்கும் என் உதவியாளருக்கும் விமான டிக்கட் பதிவு செய்து அனுப்பிவிட்டார்.

அது மட்டுமல்ல நான் தங்கியிருக்கும் அரசினர்விருந்தினர் இல்லத்தில் மூன்று படிகள் இருக்கின்றன. சக்கரநாற்காலி செல்வதற்கானஒரு ஸ்பெஷல் சறுக்குப் பாதை உடனடியாக அமைக்கப்பட்டது. நேற்று கூட்டத்தில் எனது உரை அவரை வெகுவாக ஈர்த்ததை சொன்னார். கூட்டம் முடிந்து நான் கீழே இறங்கியதும் பெருந்திரளனான வாசகர்கள் புகைப்படம் எடுக்கவும் கையொப்பம் பெறவும் சூழ்ந்துகொண்டனர். உடனே இரண்டு போலீஸ்காரர்களை பாதுகாப்புக்கு உத்தரவிட்டார். நான் கண்காட்சியை விட்டு கிளம்பும்வரை இரண்டு போலீஸ்காரர்கள்கூடவே வந்துகொண்டிருந்தது என்க்கு கூச்சமாகவும் புது அனுபவமாகவும் இருந்தது.

புத்தக கண்காட்சியை பெரும் திருவிழாவாக மாற்றிவிட்டார்.. மாவட்ட ஆட்சியரை பாராட்டிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் !

மேகநாத ரெட்டி எவ்வளவு விஷன் உள்ள கலெக்டர் என்பதற்கு நேற்று நான் அறிந்துகொண்ட ஒரு விஷம் மிகச்சிறந்த உதாரணம். மாற்றுத்திறனாளிகள் கழிவறைகள் - குளியலறைகள் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் பற்றி பலமுறை கவனப்படுத்தியிருக்கிறேன். நட்சத்திர விடுதிகளில்கூட இந்தப்பிரச்சினை இருக்கிறது. வீடுகளில் கேட்கவே வேண்டாம். இதை இந்தக் கலெக்டர் மாற்றவேண்டும் என்று நினைக்கிறார். 'உதயம்' என்ற திட்டத்தின் கீழ் locomotor disability உள்ள மாற்றத்திறனாளிகளின் வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய Spacious Ramp, western commode, உள்ளிட்ட வசதிகளோடுகூடிய accessible toiletகளை இதுவரை நூறுவீடுகளில் கட்டிக்கொடுத்திருக்கிறார்.

அவர்கள் இடம் மட்டும் கொடுத்தால் போதும். முழுச் செலவும் - ஒவ்வொரு டாய்லடிற்கும் சுமார் 45.000ரூபாய் வரை - பல்வேறு திட்டங்களில் உள்ள நிதியைப் பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

சிந்தையும் புரிதலும் உள்ள தனிமனிதர்கள் அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருக்கும்போது எவ்வளவு மாற்றங்களை உருவாக்குகிறார்கள் என்பதற்கு இதுதான் உதாரணம்" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories