தமிழ்நாடு

சர்வதேச தரத்திற்கு உயரும் சென்னை ஏர்போர்ட்: நவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான முனையம் டிசம்பரில் திறப்பு!

சென்னை விமானநிலையத்தில் புதிதாக ரூ.2,467 கோடியில்,2,20,972 சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய விமானநிலையத்தின் முதல் ஃபேஸ், வரும் டிசம்பரில் திறக்கப்படுகிறது.

சர்வதேச தரத்திற்கு உயரும் சென்னை ஏர்போர்ட்: நவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான முனையம் டிசம்பரில் திறப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை விமானநிலையத்தில் உள்நாடு, சா்வதேச முனையங்களை இணைத்து, புதிய நவீன முனையம் அமைக்கும் பணி, கடந்த 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பிரதமா் மோடி, கானோளி காட்சி மூலம் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். ரூ.2,467 கோடி மதிப்பீட்டில், 2,20,972 சதுர மீட்டா் பரப்பில் இந்த பணிகள் திட்டமிடப்பட்டன.

இந்த பணிகள் ஃபேஸ் 1 & ஃபேஸ் 2 என்று இரு பணிகளாக நடத்தி முடிக்கப்படுகிறது. முதல் ஃபேஸ்சில், 6 அடுக்கு மல்டி லெவல் காா் பாா்க்கிங், புதிய நவீன வருகை, புறப்பாடு முனையம் T2 ஆகியவைகள் உட்பட, பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுறிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்டா்கள், வி.வி.ஐ.பி.களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள், இந்த முதல் ஃபேஸ்சில் அடங்குகிறது.

சர்வதேச தரத்திற்கு உயரும் சென்னை ஏர்போர்ட்: நவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான முனையம் டிசம்பரில் திறப்பு!

ந்த முதல் ஃபேஸ் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து வரும் டிசம்பா் மாதம் இறுதிக்குள், அதிநவீன புதிய விமானநிலையத்தின் முதல் ஃபேஸ் திறப்பு விழா நடக்கவிருக்கிறது. இதையடுத்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சா் வி.கே.சிங் இன்று மதியம், டில்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்தாா்.

அதன்பின்பு திறப்பு விழாவிற்கு தயாரிக்கொண்டிருக்கும் புதிய அதி நவீன முனையத்தை ஆய்வு செய்தாா். அதோடு அதிகாரிகளிடம் சில விளக்கங்களையும் கேட்டறிந்தாா். பணிகளை விரைந்து நடத்தி முடிக்க அறிவுறித்தினாா். இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா அடுத்த மாதம் இறுதிக்குள் நடந்து, பயன்பாட்டிற்கு வரும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சர்வதேச தரத்திற்கு உயரும் சென்னை ஏர்போர்ட்: நவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான முனையம் டிசம்பரில் திறப்பு!

அதோடு இந்த புதிய முனையம் T 2 செயல்பாட்டிற்கு வந்ததும், தற்போது சா்வதேச முனையத்தில் பயன்பாட்டில் இருக்கும் T3 பழைய முனையம் சுமாா் 42,300 சதுர அடி கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். அதன்பின்பு அந்த இடத்தில் ஃபேஸ் 2 கட்டிடப்பணி மேற்கொள்ளப்படும்.

இதையடுத்து சென்னை விமானநிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024 ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது. இவ்வாறு சென்னை விமானநிலைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories