தமிழ்நாடு

தமிழக மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்க மறுத்த HDFC வங்கி.. பதிலடி கொடுக்க ‘செக்’ வைத்த மதுரை MP !

மதுரையில் நடைபெற்ற கல்விக்கடன் திருவிழாவில் 291 மாணவர்களுக்கு 18.51 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்க மறுத்த HDFC வங்கி.. பதிலடி கொடுக்க ‘செக்’ வைத்த மதுரை MP !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரையில் நவம்பர் 13 ஞாயிறன்று மதுரை மாவட்ட நிர்வாகமும் வங்கிகள் நிர்வாகமும் இணைந்து அமெரிக்கன் கல்லூரியில், உயர்கல்வி பயிலும் மதுரை மாவட்ட மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் நடை பெற்றது. இம்முகாமில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கடன் பெறு வதற்கு விண்ணப்பிக்க வருகை தந்திருந்தனர்.

இவர்களில் தகுதியான 1,002 நபர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான உரிய தகுதிகள் அடிப்படையில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வழியாக 900 மாணவர்கள் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்க மறுத்த HDFC வங்கி.. பதிலடி கொடுக்க ‘செக்’ வைத்த மதுரை MP !

இம்முகாமில் கல்விக்கடன் பெற விண்ணப்பித்துள்ள மாணவர்களில் மொத்தமாக 291 மாணவர்களுக்கு 18.51 கோடி ரூபாய் முகாமில் மாணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கல்விக்கடன் உதவி பெற்றுள்ள மாணவர்கள் கல்வியின் மூலம் தங்களது வாழ்வை மேம்படுத்தி வளம்பெற இம்முகாம் நடைபெற வேண்டி உழைத்த, முயற்சித்த அனைவரது சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இம்மாபெரும் கல்விக்கடன் முகாமில் வணிகவரி- பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி-மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கெடுத்து நிகழ்வினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமை வகித்தார். சு.வெங்கடேசன் எம்.பி., கூடுதல் ஆட்சியர் சரவணன் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிலையில், இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் பல வங்கிகள் கலந்துக்கொண்ட நிலையில், எச்.டி.எஃப்.சி வங்கிக் கலந்துக்கொள்ளவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எச்.டி.எஃப்.சி வங்கியில் இத்தகைய நடவடிக்கைக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் மதுரை எம்.பு சு.வெங்கடேசன் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்க மறுத்த HDFC வங்கி.. பதிலடி கொடுக்க ‘செக்’ வைத்த மதுரை MP !

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் நடைபெற்ற DISHA குழுவில், தமிழக மாணவர்களுக்குக் கடன் கொடுக்க மறுத்த எச்.டி.எஃப்.சி வங்கியில், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கல்விக்கடன் மேளாவில் பங்கெடுக்க மறுத்தும் கல்விக்கடன் தர மறுக்கும் எச்.டி.எஃப்.சி வங்கியில் ஏன் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை தேசிய வங்கிகளுக்கு மாற்றப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்கள் மாணவர்களுக்கு கல்விக்கடன் தரமறுக்கும் வங்கிகளில் அரசின் பணம் ஏன் டெபாஸிட் செய்யப்பட வேண்டும்? மதுரை - கல்விக்கடன் மேளாவில் பங்கெடுக்காத தனியார் வங்கியில் அரசு செய்துள்ள டெபாஸிட் தொகையை திரும்பப்பெறுவோம். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories