தமிழ்நாடு

அம்பேத்கரின் சிலை திறப்பு : “அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை” - முதல்வர் சூளுரை!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் முழு திருவுருவச் சிலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அம்பேத்கரின் சிலை திறப்பு :  “அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை” - முதல்வர் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.10.2022) சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களால் வழங்கப்பட்ட பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.

அம்பேத்கரின் சிலை திறப்பு :  “அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை” - முதல்வர் சூளுரை!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களால் 14.4.2022 அன்று பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்த நாளன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலை நிறுவுவதற்காக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் 14.5.2022 அன்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அச்சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

பின்னர் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அறியாமை இருள் போக்க வந்த அறிவுப் பேரொளி - அடிமைத் தளையை அறுத்தெறிந்த ஆதவன் சட்டமாமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலையை அவரது மணிமண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை! அதில் உறுதியுடன் நடைபோடுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories