அரசியல்

“தமிழகத்தில் மூக்கு,கால் மட்டுமல்ல; உடலை நுழைத்தாலும் திமுகவை அசைக்க முடியாது”: தமிழிசையை சாடிய அமைச்சர்!

தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழகத்தில் மூக்கு கால் மட்டும் இல்லை உடலை நுழைத்தாலும் திமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் மூக்கு,கால் மட்டுமல்ல; உடலை நுழைத்தாலும் திமுகவை அசைக்க முடியாது”: தமிழிசையை சாடிய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க தலைவராக இரண்டாவது முறை பொறுப்பேற்று உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்தி நன்றி தெரிவித்தும் பொதுக்குழு விளக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, எழில் நகர் பி பிளாக் காமராஜ் தெருவில் பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு தி.மு.க தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தும், தி.மு.க கழக அரசின் சாதனைகளை விளக்கி பேசி 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் 500 பெண்களுக்கு சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

“தமிழகத்தில் மூக்கு,கால் மட்டுமல்ல; உடலை நுழைத்தாலும் திமுகவை அசைக்க முடியாது”: தமிழிசையை சாடிய அமைச்சர்!

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது என்று சொன்னால் அந்த திட்டங்களை பெற்று தருவது பொறுப்பை கழக தோழர்கள் செய்ய வேண்டும். நீங்கள் மக்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டும். மக்கள் உங்களை நம்ப வேண்டும். மக்களின் பிரச்சனைகளை தீர்வு சொல்ல நீங்கள் இருக்க வேண்டும். அப்படி இருக்கின்ற நேரத்தில் தான் தலைவர் கருத்தை நம்மால் வலுப்படுத்த முடியும் .

இன்று எதிரிகள் பல கோணத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து செயல்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை கையகப்படுத்தி தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு இருந்த நிறுவனத்தை தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றிய அரசு ஜனநாயக விதிமுறைகளின் மீறி அரசுகளை ஒடுக்குகின்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.

“தமிழகத்தில் மூக்கு,கால் மட்டுமல்ல; உடலை நுழைத்தாலும் திமுகவை அசைக்க முடியாது”: தமிழிசையை சாடிய அமைச்சர்!

திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படி வீழ்த்தலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். நாம் கவனமாக மக்களின் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இன்று பலர் கேட்கிறார்கள் திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசின் பெயர் தான் திராவிட மாடல் அரசு. எல்லோருக்கும் எல்லாம் என்று தலைவர் திரும்ப திரும்ப சொல்கிறார். தமிழகத்தில் தொழில் முனைவோரின் பங்கு அதிக அளவில் பெண்களின் இருப்பது திராவிட ஆட்சியில் தான்.

ஆர்.எஸ்.எஸ் சங்கபரிவார் கூட்டங்களும் மக்கள் வளர்ச்சி பற்றி பேசுவதில்லை; நாம் குடிக்கக் கூடிய டீ யில் இருந்து வாங்கக் கூடிய ஒவ்வொரு பொருளிலும் ஜி.எஸ்.டி என்ற பெயரில் வரி போடுகிறார்கள். இந்த வரி எல்லாம் வைத்து பல்லாயிரம் கோடியாக ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனுடைய பங்கை இதுவரை நமக்கு தரவில்லை. இதை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா ?

“தமிழகத்தில் மூக்கு,கால் மட்டுமல்ல; உடலை நுழைத்தாலும் திமுகவை அசைக்க முடியாது”: தமிழிசையை சாடிய அமைச்சர்!

தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழகத்தில் மூக்கு வால் எல்லாம் நுழைக்கபோகின்றேன் என்று கூறுகிறார். பாண்டிச்சேரியிலும் தெலுங்கானாவிலும் மக்களுக்கு எவ்வித வசதிகள் செய்து கொடுக்கவில்லை; மக்கள் எல்லாம் துன்பத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சிக்கும் பிஜேபிக்கும் தொடர்பு இல்லை; தமிழிசை மூக்கு நுழைத்தாலும் நல்லது செய்வதற்கில்லை. குழப்பம் விளைவிப்பதற்கு தான். மூக்கு கால் மட்டும் இல்லை மொத்த உடலை நுழைத்தாலும் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.

“தமிழகத்தில் மூக்கு,கால் மட்டுமல்ல; உடலை நுழைத்தாலும் திமுகவை அசைக்க முடியாது”: தமிழிசையை சாடிய அமைச்சர்!

கவர்னர் அரசியல் சாசன சட்டப்படி இங்கு ஆட்சி நடக்கிறதா என்று என்பதை அருகில் இருந்து கண்காணித்து உதவி செய்ய வேண்டிய ஆளுநர் இன்று டெல்லியின் கைத்தடியாக இருந்து கொண்டு அரசியல் செய்பவர்களாக மாறுகிறார்கள். சட்டமன்றத்தில் நிறைவேற்றபடுகின்ற தீர்மானங்களை அவர் பார்க்க வேண்டும்.

ஆளுநருக்கு கையெழுத்து போடுவதற்கு நேரம் இல்லை. ஆனால் சனாதனம் பேசித் திரிகிறார். உங்களுடைய சலுகை மற்றும் சம்பளம் மக்களுடைய வரிப்பணம். எப்படி எல்லாம் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என பாஜகவும் அதனை சார்ந்த கூட்டங்களும் செய்து கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories