தமிழ்நாடு

காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி.. கோவையில் அதிகாலையில் நடந்த கோரம்.. DGP கூறியது என்ன ?

கோவையில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி.. கோவையில் அதிகாலையில் நடந்த கோரம்.. DGP கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே மாருதி கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த கார் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் காரில் இருந்த நபர் அப்படியே தீயில் கருகி உயிரிழந்தார். மேலும் இந்த கார் வெடித்து சிதறியதில், அருகில் இருந்த கடைகளுக்கும் தீ வேகமாக பரவியது. பின்னர் இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரித்ததில் காரில் இருந்த கார் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது என்பது தெரியவந்தது.

காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி.. கோவையில் அதிகாலையில் நடந்த கோரம்.. DGP கூறியது என்ன ?

இதையடுத்து விபத்து ஏற்பட்ட பகுதியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்து அங்கு காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர். அதோடு அந்த பகுதியில் போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ நடந்த இடத்தை ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது இதுகுறித்து அவர் கூறுகையில், "கார் யாருடையது? காரில் கேஸ் சிலிண்டர் இருந்ததா? அல்லது கேஸில் இயங்கும் காரா? என்பவை குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. காரில் உயிரிழந்த நபர் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி.. கோவையில் அதிகாலையில் நடந்த கோரம்.. DGP கூறியது என்ன ?
காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி.. கோவையில் அதிகாலையில் நடந்த கோரம்.. DGP கூறியது என்ன ?

விபத்து ஏற்பட்ட மாருதி காரின் பதிவு எண்ணைக் கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த கார் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. பின்னர் பிரபாகரனிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, 3 ஆண்டுகளுக்கு முன்பே அந்த காரை விற்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை டி.ஜி.பி சைலேந்திர பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த விபத்து சம்பவத்திற்காக 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றுவருகிறது. எங்களது தனிப்படை குழு சம்பவ இடத்தில் தற்போது தடையங்களை சேகரித்துக்கொண்டிருக்கின்றனர்.

காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி.. கோவையில் அதிகாலையில் நடந்த கோரம்.. DGP கூறியது என்ன ?

சென்னையிலிருந்து தடவியல் அறிவியல் துறையினர் வந்துள்ளார். மேலும் கோவையில் இருக்கும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காரில் இரண்டு சிலிண்டர்கள் இருந்துள்ளது; அதில் ஒன்று தான் வெடித்துள்ளது. தற்போது இந்த சிலிண்டர்கள் எங்கே வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அந்த கார் யாருடையது, தற்போது யார் இந்த காரை பயன்படுத்தி வந்துள்ளார், காரில் இருந்த நபர் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெறுகிறது. இது விபத்தா, திட்டமிட்ட செயலா என்று எல்லா கோணத்திலும் விசாரணை நடைபெறும்" என்றார்.

banner

Related Stories

Related Stories