தமிழ்நாடு

கனிமொழி MP, அமைச்சர் கீதாஜீவனுக்கு கடிதம் அனுப்பிய அரசு பள்ளி மாணவ மாணவிகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய மாணவ மாணவிகள் - இது குறித்த செய்தி தொகுப்பு

கனிமொழி MP, அமைச்சர் கீதாஜீவனுக்கு கடிதம் அனுப்பிய அரசு பள்ளி மாணவ மாணவிகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தகவல் பரிமாற்றம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. மன்னர்கள் காலத்தில் புறாக்களின் கால்களில் ஓலைகளில் எழுதப்பட்ட தகவல்கள் கட்டி அனுப்பப்பட்டன. அதன் பின்பாக தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியாக கடிதப் போக்குவரத்து என்பது உருவானது.

இந்த கடிதப் போக்குவரத்து நம்மிடம் உள்ள அனைத்து தகவல்களையும் மற்றவருக்கு எடுத்துச் செல்ல பயனுள்ளதாக இருந்தது அந்த வகையில், தான் பண்டிகை காலங்களில் தங்கள் வாழ்த்துக்களை வாழ்த்து அட்டையில் மூலமாக பரிமாறும் நிகழ்வும் நடைபெற்று வந்தது தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்மஸ், பொங்கல், தமிழ் புத்தாண்டு, மற்றும் பிறந்தநாள் என எண்ணற்ற விழாக்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி மகிழ்ந்த காலங்கள் உண்டு.

கனிமொழி MP, அமைச்சர் கீதாஜீவனுக்கு கடிதம் அனுப்பிய அரசு பள்ளி மாணவ மாணவிகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!

இது போல் பண்டிகை காலங்களில் நம் உறவினர்களிடமிருந்து நண்பர்கள் இருந்தோ வரும் வாழ்த்து அட்டைகள் நம்மிடையே அளப்பரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும். காலப்போக்கில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கடிதப் போக்குவரத்து மெல்ல மெல்ல குறைந்து உள்ளது. இதுபோல் வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும் வெகுவாக குறைத்துள்ளது. தற்போது நவீன வளர்ச்சியின் பரிமாணமான வாட்ஆப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட இணைய வழியாக வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.

ஆனால் கடிதங்கள் மூலமாகவும் வாழ்த்து அட்டைகள் மூலமாகவும் பகிர்ந்த போது உள்ள மகிழ்ச்சி தற்போது உள்ளதா என்றால் குறைவுதான். அந்த வகையில் தான் வரக்கூடிய சமுதாயத்திற்கும் கடிதம் குறித்தும் வாழ்த்த அட்டையில் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்ற வகையில் தூத்துக்குடி அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு போஸ்ட் கார்டு மூலம் தீபாவளிக்கு வாழ்த்துக்களை எழுதி அனுப்பும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

கனிமொழி MP, அமைச்சர் கீதாஜீவனுக்கு கடிதம் அனுப்பிய அரசு பள்ளி மாணவ மாணவிகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த பள்ளியில் படிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போஸ்ட் கார்டுகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாநகராட்சி  மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து எழுதி அவர்களின் முகவரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

2 ஆம்வகுப்பு முதல்  5 ஆம்  வகுப்பு  வரை  உள்ள   மாணவ, மாணவிகள்  தபால்  அட்டையில் தீபாவளி  நல் வாழ்த்துக்கள் அனுப்பினர்கள். வருங்கால சமுதாயத்திற்கு கடிதம் குறித்தோ வாழ்த்து அட்டைகள் அனுப்புவது குறித்தோ தெரியாத ஒரு சூழ்நிலை தற்போது உள்ளது அதை மாற்றும் வகையில் இந்தப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும். இதன் மூலம் மாணவ மாணவிகளின் கையெழுத்து மட்டுமின்றி நினைவாற்றலும் சீராகும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கனிமொழி MP, அமைச்சர் கீதாஜீவனுக்கு கடிதம் அனுப்பிய அரசு பள்ளி மாணவ மாணவிகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!

கடிதங்களையோ வாழ்த்து அட்டைகளையோ இதுவரை கண்டிராத மாணவ - மாணவியர் மிகவும் ஆர்வத்துடன் தங்களின் தீபாவளி வாழ்த்துக்களை மழலை எழுத்துக்களில் எழுதி அனுப்பி வைத்தனர். இதுபோல் வாழ்த்து கடிதம் எழுதியது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என மாணவ மாணவியர் தெரிவித்தனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்துக்கு நாம் சென்றாலும் நம்மளுடைய பழைய பழக்க வழக்கங்களை இளைய சமுதாயத்தினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பாராட்டுக்குரியது.

banner

Related Stories

Related Stories