தமிழ்நாடு

“மார்பக புற்றுநோயால் பாதிக்கும் பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை” : ‘Breast Cancer Diaries’ திட்டம் தொடக்கம்!

மார்பக புற்று நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அப்போலோ பிரெஸ்ட் கேன்சர் டைரிஸ் என்னும் புதிய திட்டத்தை சமூக நலத்துறை மற்றும் பெண்களின் திறனதிகார துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வந்தார்.

“மார்பக புற்றுநோயால் பாதிக்கும் பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை” : ‘Breast Cancer Diaries’ திட்டம் தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் கேன்சர் செண்டர் மருத்துவமனையில், அப்போலோ கேன்சர் பிரெஸ்ட் டைரீஸ் என்னும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஒரு புதிய திட்டம் துவங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “உலக அளவில் ஒரு தரமான சிகிச்சை நம்முடைய தமிழ்நாட்டில் இருப்பது நமக்கு மிகவும் பெருமை.

இன்று பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எளிதாக வருகிறது. கேன்சர் என்ற வார்த்தையை கேட்டவுடன் மனம் உடைந்து இருப்பார்கள். இப்படியே இருந்து விடலாம் என்று அதிக பெண்கள் நினைப்பார்கள்.

“மார்பக புற்றுநோயால் பாதிக்கும் பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை” : ‘Breast Cancer Diaries’ திட்டம் தொடக்கம்!

நம் உடலில் சிறிய மாறுபாடு தெரிந்தவுடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றால் நம் எளிதில் குணமடையலாம். தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை தந்திட வேண்டும். நிச்சயமாக இது ஒரு குணமடைய கூடிய நோய்தான்.

தென்னிந்தியாவிலே இதுதான் முதல் புரோட்டான் சென்டர். இது மட்டுமல்லாமல் உலக அளவில் இரண்டாவது பயிற்சி மையமாகவும் புரோட்டான் திரப்பிக்கு செயல்பட்டு வருகிறது. உலக அளவில் இருக்கக்கூடிய உயர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வந்து பயிற்சி பெறக்கூடிய ஒரு நிலையே இந்த மருத்துவமனை உருவாக்கியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வரக்கூடிய அனைவரது பொருளாதார வளர்ச்சியும் மேம்படுகிறது. நம் முதலமைச்சர் என்னம் அதுவாகத் தான் உள்ளது. குறிப்பாக மருத்துவத் துறையின் பங்களிப்பும் அதிகம் இருக்க வேண்டும். ஆகவே மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் தொடக்க நிலையில் நமது பெண்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

banner

Related Stories

Related Stories