தமிழ்நாடு

அறுத்து எறியப்படும் கேபிள் ஒயர்கள்.. சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்குக் குவியும் பாராட்டுகள்!

சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையைப் பாராட்டி இணையவாசி ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறுத்து எறியப்படும் கேபிள் ஒயர்கள்.. சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்குக் குவியும் பாராட்டுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து அதற்காக நடவடிக்கையும் நடக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் மூலம் பயனாளிகள் பலரும் பயனடைந்து வருகின்றனர். அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு உடனே நிறைவேற்றப்படுகிறது.

அறுத்து எறியப்படும் கேபிள் ஒயர்கள்.. சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்குக் குவியும் பாராட்டுகள்!

அதேபோல் சென்னை மாநகராட்சியும் பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் சாலைகளில் தேவையற்று அறுந்து கிடக்கும் கேபிள் டி.வி மற்றும் இன்டர்நெட் ஒயர்கள் அகற்றும் பணிகளை முடக்கிவிட்டுள்ளது.

திருவொற்றியூர் மண்டலம் முதல் சோழிங்கநல்லூர் வரை 165.87 கிலோமீட்டருக்கு ஒயர்கள் அகற்றப்பட்டுள்ளது. இதன் விவரம் குறித்து சென்னை மாநகராட்சிவெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பார்த்திபன் தா என்பவர் தனது சமூக வலைதளத்தில் மாநகராட்சியின் நடவடிக்கையை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "பல வருட கோரிக்கை ஒரு வழியாக நிறைவேறி கொண்டிருக்கிறது.

சென்னை முழுவதும் எந்த சாலையில் பார்த்தாலும் சுமார் 50 கேபிள்களாவது சாலையின் நடுவே செல்லும், யாரிடம் அனுமதி வாங்கினார்கள், என்ன கேபிள் இது என எதையும் கண்டுபிடிக்க முடியாத வகையில் பின்னி பிணைந்து இருக்கும்.

அந்த ஏரியா வில் ஏதேனும் broadband connection தடை ஏற்பட்டால் கூட அதை சரி செய்பவர்கள், கேபிளை சரி செய்ய முடியவில்லை என்றால், பழைய கேபிளை அகற்றாமல், அப்படியே வேறொரு புதிய கேபிளை போட்டு விட்டு போய்விடுகின்றனர். அதை எங்கேயும் புகாரும் தெரிவிக்க முடியாது. வெவ்வேறு முனையில் இருந்து ஒரு தீவிரவாத network கூட கேபிள் அமைத்து தொடர்பில் இருக்கலாம். நம்மால் அதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் இந்த கேபிள்கள் உள்ளன.

இன்று அகற்ற பட்டது வெறும் 165 கிமீ நீளம் கேபிள் மட்டுமே. சென்னை முழுக்க இருக்கும் அனைத்து கேபிள்களும் பாரபட்சமின்றி அறுத்து எறிய வேண்டும். இதை செயல்படுத்திய Greater Chennai Corporation க்கு நன்றிகள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories