சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் சஞ்சீவ் (35) பூங்குழலி (28). இவர்களுக்கு 6 வயதில் மற்றும் 6 மாத பெண் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். சஞ்சீவ் அமைந்தகரை பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். நேற்று ஆயுதபூஜை என்பதால் குடும்பதோடு சஞ்சீவ் தனது கடைக்கு வந்துள்ளார்.
அப்போது இவர்கள் சாலையை கடந்த நிலையில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் பூங்குழலி மற்றும் அவரது மாத பெண் குழந்தை மீது மோதியது . இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சஞ்சீவ் மனைவி மற்றும் மகளை மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றுள்ளார். ஆனால் சாலையிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தின்போது இரு சக்கர வாகனத்தை ஓடிவந்த இளைஞரும் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணும் கீழே விழுந்ததில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் நீகால் (27), சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்திகா (24) என்பதும் தெரியவந்தது. அதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர் மது அருந்தியிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நீகால், கீர்த்திகாவை போலிஸார் கைது செய்தனர்.