தமிழ்நாடு

கடலூரில் குழந்தை திருமணம் - சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர் - தந்தை உள்ளிட்ட 2 பேர் கைது!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தை திருமணம் செய்து வைத்த பத்ரிசன் தீட்சிதர், அவரது தந்தை தில்லை நாகரத்தினம் தீட்சிதர் ஆகிய இரண்டு பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் குழந்தை திருமணம் - சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர் - தந்தை உள்ளிட்ட 2 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் பத்ரிசன் (19). இவர் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் தீட்சிதராக உள்ளார். இவர் பள்ளியில் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு ரகசிய குழந்தை திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து கடலூர் ஊர்நல அலுவலர் சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர், சித்ரா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தீட்சிதருடன் குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரான பத்ரிசன் மீதும், சிறுமியை திருமணம் செய்த நாகரத்தினம் தீட்சிதர் மீதும், சிறுமியின் தாய் தங்கம்மாள் உள்ளிட்ட 4 பேர் மீதும் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தை திருமணம் செய்து வைத்த தீட்சிதர் தில்லை நாகரத்தினம், சிறுமியின் தந்தை ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்தனர்.

குழந்தை திருமணம் செய்து வைத்துள்ள சிதம்பரம் கோயில் தீட்சிதர் உள்ளிட்ட 4 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories