தமிழ்நாடு

ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான திருடனின் கால்.. பயணிகளிடம் திருட முயன்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம் !

ரயிலில் திருட முயன்ற நபர் ரயில் படிக்கட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் அவரது கால் துண்டாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான திருடனின் கால்.. பயணிகளிடம் திருட முயன்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சென்டரல் டாக்டர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இரயிலில் செல்லும் பயணிகளிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக பலமுறை புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

அதிலும், ரயிலின் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிக்கும் பயணிகள், ரயில் படியில் நின்றபடி செல்லும் பயணிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் செல்போன் பறிக்க முயன்ற திருடன் ரயிலில் இருந்து விழுந்து கால் எலும்பை முறிந்துக்கொண்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான திருடனின் கால்.. பயணிகளிடம் திருட முயன்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம் !

செல்போன் திருட்டு போன்ற பல்வேறு திருட்டு குற்றங்களில் தொடர்புடையவர் நவீன் எனப்படும் அட்டை நவீன். இவர் சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டி வரை செல்லும் ரயிலில் திருட சென்றுள்ளார். ரயில் கொருக்குப்பேட்டையை நெருங்கிய நிலையில் மெதுவாக சென்றுள்ளது. அப்போது அங்கிருக்கும் ரயில்வே கேட்டில் நின்றுகொண்டிருந்த நவீன் ரயிலில் ஏற முயற்சித்தபோது தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி அவரது இடது கால் முறிந்து துண்டாகியுள்ளது. இந்த சம்பவத்தை கண்ட ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories