தமிழ்நாடு

காரக்குழும்பில் இருந்த காது குடையும் பட்ஸ்.. பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பல்லாவரம் அருகே தனியார் உணவகத்தில் காரக் குழம்பில் காது துடைக்கும் பட்ஸ் இருந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காரக்குழும்பில் இருந்த காது குடையும் பட்ஸ்..  பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த பல்லாவரம் அருகே பிரபலமான தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சாப்பிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த உணவகத்தில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிட வந்துள்ளார். இவர் முதலில் சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு அடுத்ததாக காரக்குழுப்பு கேட்டுள்ளார்.

காரக்குழும்பில் இருந்த காது குடையும் பட்ஸ்..  பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதையடுத்து உணவு ஊழியர் காரக்குழும்பை எடுத்து சாதத்தில் ஏற்றியுள்ளார். அப்போது அதில் காது குடையும் பட்ஸ் இருந்தை கண்டு முருகன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

காரக்குழும்பில் இருந்த காது குடையும் பட்ஸ்..  பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இது குறித்து முருகன் உணவக உரிமையாளரிடம் கேட்டபோது முறையாகப் பதில் சொல்லாமல், அதை எடுத்துப் போட்டுவிட்டுச் சாப்பிடும் படி அலட்சியமாகக் கூறியுள்ளார். இதனால் உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories