தமிழ்நாடு

பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட கூடலூர் பெண்.. சிகிச்சை என்ற பெயரில் கேரள வைத்தியர் செய்து வந்த கொடுமை..

பக்கவாதம் வந்த பெண்ணை 3 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த கேரள வைத்தியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட கூடலூர் பெண்.. சிகிச்சை என்ற பெயரில் கேரள வைத்தியர் செய்து வந்த கொடுமை..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர 36 வயதுடைய பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் பல மருத்துவர்களிடம் காட்டியும் குணமாகாத நிலையில், பெண்ணின் உறவினர் ஒருவர், பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்க, அவர்கள் இவரை வேறு ஒரு மருத்துவரிடம் காட்டியுள்ளனர்.

அதாவது கடந்த ஜூன் மாதம் கேரளா மாநிலம் மலப்புரம், நிலம்பூர் என்ற பகுதியில் கோபாலன் என்ற வைத்தியரை அணுகியுள்ளனர். அவரும் இந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். மேலும் அவர் இந்த பெண்ணை தனது வீட்டில் வைத்து வைத்தியம் செய்து வந்துள்ளார்.

பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட கூடலூர் பெண்.. சிகிச்சை என்ற பெயரில் கேரள வைத்தியர் செய்து வந்த கொடுமை..

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பெண்ணின் உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறி அவரது குடும்பத்தாரிடம் கூடலூரில் விட்டு சென்றுள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, வைத்தியர் தன்னை தொடர்ந்து 3 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.

பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட கூடலூர் பெண்.. சிகிச்சை என்ற பெயரில் கேரள வைத்தியர் செய்து வந்த கொடுமை..

இதைக்கேட்டு அதிர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார், உடனடியாக கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். மேலும் கேரளவைச் சேர்ந்த வைத்தியர் கோபாலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட கூடலூர் பெண்.. சிகிச்சை என்ற பெயரில் கேரள வைத்தியர் செய்து வந்த கொடுமை..

வைத்தியத்துக்காக சென்ற பக்கவாதம் அடைந்த பெண்ணை, தொடர்ந்து 3 மாதகாலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த வைத்தியரின் செயல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories