தமிழ்நாடு

வணிக வரி,பதிவுத்துறையின் அடுத்த சாதனை.. 6 மாதத்தில் ரூ.66161 கோடி வசூல்: பெருமிதத்துடன் சொன்ன அமைச்சர்!

வணிக வரி, பதிவுத்துறையில் 6 மாததில் ரூ.66,161 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

வணிக வரி,பதிவுத்துறையின் அடுத்த சாதனை.. 6 மாதத்தில்  ரூ.66161 கோடி வசூல்: பெருமிதத்துடன் சொன்ன அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு துறைகள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலாக வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பான கல்வி, பெண்கள், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு புதிய புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த அ.தி.மு.க ஆட்சியிலிருந்ததுபோல் இல்லாமல் தி.மு.க ஆட்சியில் பதிவுத்துறை பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

வணிக வரி,பதிவுத்துறையின் அடுத்த சாதனை.. 6 மாதத்தில்  ரூ.66161 கோடி வசூல்: பெருமிதத்துடன் சொன்ன அமைச்சர்!

இந்நிலையில் வணிகவரி, பதிவுத்துறையில் கடந்த ஆண்டை விட ரூ.20,776 கோடிக்கு அதிகமாக வசூல் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

வணிகவரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூபாய் 66,161 கோடி ஆகும். இது கடந்த வருடத்தில் இதே நாள் வரை வசூலிக்கப்பட்ட ரூ. 47,873 கோடியை விட ரூ. 18,288 கோடி அதிகமாகும்.

வணிக வரி,பதிவுத்துறையின் அடுத்த சாதனை.. 6 மாதத்தில்  ரூ.66161 கோடி வசூல்: பெருமிதத்துடன் சொன்ன அமைச்சர்!

வணிகவரி வசூலில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. இதைப்போலவே பதிவுத்துறையிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை இல்லாத அளவில் வசூல் சாதனை எய்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் மட்டும் வசூல் ரூபாய் 1610 கோடியைத் தாண்டியுள்ளது. 1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் பதிவான ஆவணங்களின் எண்ணிக்கை 17,56,977 ஆகும். வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 8,696 கோடி ஆகும். கடந்த வருடத்தில் அதாவது 30.9.2021 வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 6,208 கோடி என்ற நிலையில் கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில் ரூபாய் 2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வகையில் வணிகவரித்துறையும் பதிவுத்துறையும் சேர்ந்து கடந்த ஆண்டைவிட ரூபாய் 20,776 கோடி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளன.

இவ்வாறு அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories