தமிழ்நாடு

அய்யோ போச்சே போச்சே.. கல்லூரி மாணவிகள் முன்பு சீன் போட நினைத்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்!

காரைக்குடியில் கல்லூரி மாணவிகள் முன்பு இருசக்கர வாகனத்தில் சீன் போட நினைத்த வாலிபர் கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அய்யோ போச்சே போச்சே.. கல்லூரி மாணவிகள் முன்பு சீன் போட நினைத்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது. இக்கல்லூரி அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் மாணவிகள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதில் வாகனத்தின் பின்னால் இருந்த இளைஞர், இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்தார். அப்போது நிலை தடுமாறி இந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அய்யோ போச்சே போச்சே.. கல்லூரி மாணவிகள் முன்பு சீன் போட நினைத்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்!

அந்த வீடியோவில், "இருச்சகர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மஞ்சல் சட்டை அணிந்த இளைஞர், மாணவிகளை பார்த்தவுடன் இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்கிறார். அப்போது நிலை தடுமாறி அவர் சாலையில் கீழே விழும் காட்சி" பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர் எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலானை அடுத்து நெட்டிசன்கள் பலரும் இளைஞரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories