தமிழ்நாடு

அதிகாரி போல் நடித்து நூதன கொள்ளை.. போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை மடக்கி பிடித்த போலிஸ் - சிக்கியது எப்படி?

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 55-வயதான போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை போலிஸார் கைது செய்தனர்.

அதிகாரி போல் நடித்து நூதன கொள்ளை.. போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை மடக்கி பிடித்த போலிஸ் - சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் தரமணியில் உள்ள தலைமை நீர்வளத்துறை அலுவலகத்தில் முதன்மை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23ம் தேதி அசோகன் தரமணி அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அனிந்து வந்த ஒருவர் தான் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் என்றும் உங்கள் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அசோகன் அறையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக சோதனை செய்த பின்பு அலுவலகத்திலிருந்து நீர்வளத்துறை அதிகாரி அசோகன் காரில் அவரை அழைத்துக்கொண்டு, சைதாப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்று வீட்டிலும் தனது சோதனை செய்துள்ளார் போலி அதிகாரி.

ஒரு கட்டத்தில் நீர்வளத்துறை அதிகாரி மீதுள்ள புகாரை விசாரிக்காமல் இருக்க ரூபாய் (10,00,000) பத்து லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என கூறும் இவர் லஞ்சம் கேட்பதும், உடன் யாரும் இல்லாமல் தனியாக வந்துள்ளதும் நீர்வளத்துறை அதிகாரிக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், நீர்வளத்துறை அதிகாரியின் சகோதரர் காவல்துறை டி.எஸ்.பி-யாக இருப்பதால் மனைவியிடம் கூறி டி.எஸ்.பி-க்கு தகவல் தெரிவித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் யாரேனும் சோதனைக்கு வந்துள்ளனரா என்பதை உறுதி செய்யும்படி கூறியுள்ளார்.

அதிகாரி போல் நடித்து நூதன கொள்ளை.. போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை மடக்கி பிடித்த போலிஸ் - சிக்கியது எப்படி?

பின்னர் வீட்டிலிருந்து நீர்வளத்துறை அதிகாரி அசோகனை அழைத்துக்கொண்டு அவரது வங்கி கணக்கு வைத்துள்ள சிந்தாரிப்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு இவர்கள் செல்வதற்கு முன்பு நீர்வளத்துறை அதிகாரியின் மனைவி முன்னதாக வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து தனது கணவர் மற்றும் அவருடன் யார் வந்தாலும் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அதேபோல் வங்கிக்கு போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியும் நீர்வளத்துறை அதிகாரியும் சென்றுள்ளனர். அங்குள்ள வங்கியின் அதிகாரியிடம் இவரது கணக்கில் இருந்து ரூபாய் 10 லட்சம் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு வங்கி அதிகாரி இவரது கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டுமென்றால் அவரது மனைவி வரவேண்டும் ஏனென்றால் இது ஜாயின்ட் அக்கவுண்ட் என கூறியுள்ளார்.

அப்பொழுது அந்த போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி 10 லட்சம் தரவில்லை என்றால் பரவாயில்லை 2 லட்சமாவது கொடுங்கள் என்று கேட்க, அதற்கு வங்கி அதிகாரியோ ஒரு ரூபாய் கூட அவரது மனைவி இல்லாமல் எடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வங்கியிலிருந்து வெளியேறிய அவர் ஆலந்தூர் தலைமை அலுவலகத்திற்கு செல்லலாம் என்று கூறி இருவரும் நீர்வளத்துறை அதிகாரி அசோகன் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது நீர்வளத்துறை அதிகாரி செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை பற்றி பேசியதால் தன்னை போலி என்று கண்டுபிடித்து விட்டார்கள் என்று சூதாரித்துக்கொண்ட போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நுங்கம்பாக்கத்தில் காரை நிறுத்தும்படி கூறி அங்கேயே இறங்கிவிட்டு, நீங்கள் முதலில் அலுவலகத்திற்கு செல்லுங்கள் நான் பின்னால் வருகிறேன் என்று கூறிவிட்டு இறங்கி சென்றுள்ளார்.

அதிகாரி போல் நடித்து நூதன கொள்ளை.. போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை மடக்கி பிடித்த போலிஸ் - சிக்கியது எப்படி?

இதுகுறித்து போலிஸாரை வைத்து ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதும் வந்தவர்கள் பணம் பறிக்கும் போலியான நபர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்தவர் மீது நீர்வளத்துறை அதிகாரி அசோகன் தரமணி காவல் நிலையத்தில் ஆய்வாளர் பழனியிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் உதவி ஆணையர் ஜீவானந்தம் மேற்பார்வையில் ஆய்வாளர் பழனி தலைமையில் காவலர்கள் மகேஷ், ஐசக், உதயகுமார், கர்ணா ஆகியோர் கொண்ட தனிப்படை ஒன்று அமைத்து அரசு அதிகாரிகளை குறிவைத்து போலி அதிகாரியை போல் பணம் பறிக்கும் நபரை வலை வீசி தேடி வந்தனர்.

சிந்தாரிப்பேட்டை வங்கியில் பணம் எடுக்க சிசிடிவி காட்சிகளை கைபற்றிய தனிப்படை போலிஸார் நேற்றிரவு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த 55-வயதான சின்னையன் என்பவரை அவரது வீட்டில் தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.

கைதான சின்னையனை தரமணி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் தந்தை வரதராஜலு வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்ததாகவும் தந்தை இறந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு பணம் கஷ்டம் ஏற்பட்டதாகவும் இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீட்டில் சோதனை செய்ததை பார்த்துள்ளார்.

அதிகாரிகளை போல் போலியாக சென்று அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டி கடந்த 22ம் தேதி கோயம்பேட்டில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் சென்று உங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என கூறி உங்கள் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் வந்துள்ளது உங்களை விசாரிக்க வேண்டும் என கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த அவரது மனைவி அவர் வைத்திருந்த தங்க நகைககளை எடுத்து காண்பித்துள்ளார். ஆனால் அதை எடுத்துக்கொள்ளமல் பணம் மட்டும் கேட்டுள்ளார் பணம் இல்லை என்று கூறியதால் நாளை காலை ஆலந்தூரில் உள்ள அலுலலகத்திற்கு வரும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதை தொடர்ந்து மறுநாள் 23ம் தேதி தரமணியில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அசோகனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக போலியாக நடித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார்.

போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சின்னையனுக்கு திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், குடும்ப கஷ்டத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறிக்கும் நோக்கத்தில் ஈடுபட்டது தெரியவந்தது விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories