தமிழ்நாடு

“சென்னை முதல் குமரி வரை ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு” : தந்தை பெரியாருக்கு மகுடம் சூட்டிய முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

“சென்னை முதல் குமரி வரை ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு” : தந்தை பெரியாருக்கு மகுடம் சூட்டிய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இன்று (செப். 17) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை “சமூகநீதி நாள்” என அறிவித்து கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

அதுமட்டுமல்லாது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த “சமூகநீதி நாள்” உறுதிமொழியையும் எடுத்து வருகின்றனர். மேலும் சம கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, கலப்புத்திருமணம், தீண்டாமை எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு நிலை, கைம்பெண் மறுமணம் என தந்தை பெரியாரின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சமூகநீதி நாளுக்கான உறுதிமொழிகள்!

“பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்,

'எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப் பிடிப்பேன், சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும்

கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக

- என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுட பற்றும் மனிதாபி மானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும், சமூக நீதியை அடித்தளமாக கொண்டு சமுதாயம் அமைக்கும்

எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்”

banner

Related Stories

Related Stories