தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கம் : ராதாகிருஷ்ணன் எச்சரிகை !

தமிழத்தில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடு படுபவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் எச்சரிகை விடுத்துள்ளார்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கம் : ராதாகிருஷ்ணன் எச்சரிகை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுத்து வரும் தகவலை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தமிழக ஆந்திரா எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடி, செங்குன்றம் அரிசி ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், “நியாய விலைக் கடையில் இலவச பொருட்கள் தேவை இல்லை என்றால், பொதுமக்கள் வாங்க வேண்டாம். வாங்கி மற்றவருக்கு விற்பதை தவிர்க்க வேண்டும்.

கடந்த மே மாதம் முதல் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 3.65 மெட்ரிக் டன் ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 11 ஆயிரத்து 8 வழக்கு பதிவு செய்து11 ஆயிரத்து 121 கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அதில் 113 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாது, திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டு அதில் 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ரேஷன் அரிசி பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்ற குற்றவழக்கு பதிவு செய்த பின், அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்குவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படு வருகிறது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories