தமிழ்நாடு

8 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை: திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி!

திருச்சியில் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

8 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை: திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சியில் கடைக்கு சென்ற 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது .

இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து ராஜேந்திரன் (36) மீது கடந்த 2020, ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது . இந்த வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்ரீவத்சன் விசாரணையை முடித்து ராஜேந்திரனுக்கு ச / பி 9 ( m ) r / w 10 of POCSO Act- ன்படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் , ரூ .3,000 / – அபராதமும் , ச / பி 366 இதச – ன்படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் , ரூ .2,000 / – அபராதமும் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் அருள்செல்வி ஆஜரானார்கள். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories